அமீரக செய்திகள்

UAE: தினமும் 50 பொருட்களுக்கு 50% தள்ளுபடி..!! லுலுவின் அட்டகாசமான 50 நாள் சலுகை விற்பனை..!!

ஐக்கிய அரபு அமீரகம் உருவாகி 50 வருடங்கள் நிறைவடையவிருப்பதை முன்னிட்டு அமீரகம் இந்த பொன்விழாவை மிக விமரிசையாக கொண்டாடவிருக்கின்றது.

அமீரகத்தின் பொன்விழாவை முன்னிட்டு முன்னணி சில்லறை விற்பனையாளரான லுலு ஹைப்பர் மார்க்கெட், பலவிதமான ப்ரொமோஷன், செயல்பாடுகள் மற்றும் CSR முன்முயற்சிகளுடன் பொன்விழாவைக் கொண்டாடுகிறது.

அதில் அக்டோபர் 21 முதல் டிசம்பர் 9 வரை, ‘UAE ப்ரவுட் 50’ என்ற கருப்பொருளின் கீழ் அமீரகத்தில் இருக்கக்கூடிய லுலுவின் 87 கடைகளில் தினமும் 50 பொருட்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லுலுவின் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் V. நந்தகுமார் “மளிகை, டிஜிட்டல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஃபேஷன் பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும். 50 நாட்களில் 4,000 க்கும் அதிகமான பொருட்களுக்கு 50 சதவிகித தள்ளுபடி வழங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விருப்பங்களை வழங்குவதற்காக தயாரிப்புகள் மற்றும் வகைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

லுலு கடைகளில் 100 திர்ஹம் செலவழிப்பவர்கள் மொத்தமாக 2.5 கிலோ தங்கம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு டிசம்பர் 2 ம் தேதி ஒரு டிரா நடைபெறும் என்றும் அதில் ஐம்பது வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் தலா 50 கிராம் தங்கத்தை வெல்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 26 முதல், ‘டிஜிடெக்’ ப்ரொமோஷனானது மொபைல் போன்கள், மின்னணு பொருட்கள், கேமராக்கள், IT பாகங்கள் மற்றும் கேஜெட்களில் மெகா டீல் விற்பனை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் பழைய மொபைல் போன்கள், டிவிகள் மற்றும் மடிக்கணினிகளை கொடுத்து புதிய ஒன்றை வாங்கிக்கொள்ளலாம். பொருட்கள் வாங்குபவர்களுக்கு பூஜ்ஜிய சதவீத வட்டியுடன் மாத தவணை செலுத்துவதற்கான சலுகையும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு, பேஷன், இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள், மொத்த மற்றும் கார்ப்பரேட் ஆர்டர்களுக்கான சிறப்பு தள்ளுபடி மற்றும் தீபாவளி கிஃப்ட் கார்ட் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து எலக்ட்ரானிக்ஸ், மொபைல்கள் மற்றும் கேஜெட்களுக்கான தள்ளுபடிகள் நவம்பர் 23 முதல் டிசம்பர் 2 வரை இருக்கும் என தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!