அமீரக செய்திகள்

UAE: நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக நாளை அனைத்து மசூதிகளிலும் இறுதி தொழுகை..!! அமீரக அதிபர் உத்தரவு..!!

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரந்தவர்களுக்கு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளிலும் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து (வெள்ளிக்கிழமைத் தொழுகை) அவர்களுக்காக வேண்டி இறுதித் தொழுகை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

துருக்கி மற்றும் சிரியாவைத் தாக்கிய பெரும் பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று 20,000 ஐ நெருங்கியுள்ளது. தற்பொழுது பனி மூட்டமான வானிலை நிலவி வருவதால் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக 100 மில்லியன் டாலர்கள் வழங்க ஷேக் முகமது உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே தேடல் மற்றும் மீட்புக் குழுவை அனுப்பியுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு கள மருத்துவமனையையும் நிறுவியுள்ளது.

அது மட்டுமல்லாது ஐக்கிய அரபு அமீரகமானது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்காக “கேலண்ட் நைட்/2″(operation “Gallant Knight/2”) செயல்பாட்டைத் தொடங்குவதாக அறிவித்திருந்தது. இதற்கிடையில், அபுதாபியில் உள்ள துருக்கிய தூதரகமும் நிலநடுக்க பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை சேகரித்து வருகின்றது.

இந்த பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள், தூதரகம் மற்றும் எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட், துருக்கிய ரெட் கிரசன்ட், யுனிசெஃப் மற்றும் பிறவற்றின் மூலம் நன்கொடை அளிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!