அமீரக செய்திகள்

UAE: துபாய் கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக தள்ளுபடி கார்டு வழங்க முடிவு..!

துபாயில் இதுவரை 65,000 பேருக்கு கோல்டன் விசா வழங்கபட்டுள்ள நிலையில் அவர்களுக்கு Esaad சலுகை கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துபாய் காவல்துறையின் Essar கார்டு கமிட்டியின் தலைவர் மோனா முகமது அல் அம்ரி, தேவையான விவரங்களை குறிப்பிட்டு SMS மூலம் கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு கார்டு பகிரப்படும் என்றார்.

கார்டைப் பெறும் கோல்டன் விசா வைத்திருப்பவர்களின் பிரிவுகள் பின்வருமாறு: பொது முதலீட்டு நிதிகளில் முதலீட்டாளர்கள், ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், சிறப்பு திறமை கொண்ட மக்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், நிபுணர்கள், கண்டுபிடிப்பாளர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், கலாச்சாரம், கலையில் ஆக்கப்பூர்வமான நபர்கள், நிர்வாக இயக்குநர்கள், சிறப்புக் கல்வியாளர்கள், தொழில்முறை விளையாட்டு வீரர்கள், பொறியியல் அல்லது அறிவியலில் நிபுணத்துவம் பெற்ற PhD பட்டம் பெற்றவர்கள், மனிதாபிமான உதவிப் பணியாளர்கள், சிறந்த பல்கலைக்கழகம் மற்றும் உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகள் ஆகியோரும் அடங்குவர்.

Esaad அட்டை என்பது துபாய் காவல்துறையால் 2018இல் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது சுகாதாரம், கல்வி, விருந்தோம்பல், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் மற்றும் உணவகங்கள் உட்பட பல துறைகளில் விரிவான பலன்கள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7,237 பிராண்டுகள், வணிகங்கள் மற்றும் உலகளவில் 92 நாடுகளில் இந்த Essar கார்டை பயன்படுத்தி சலுகைகள் பெற முடியும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!