அமீரக செய்திகள்

UAE: உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க வந்தாச்சு “Sharjah Light Festival”.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா எமிரேட்டில் ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் லைட் ஃபெஸ்டிவல் கொண்டாட்டமானது, அதன் 12வது பதிப்பில் தற்பொழுது அடியெடுத்து வைக்கவுள்ளது. இந்த லைட் ஃபெஸ்டிவல் நடைபெறும் காலம் முழுவதும் ஷார்ஜாவின் முக்கிய இடங்கள் அனைத்தும் காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வண்ண விளக்குகளால் ஜொலிக்கப்படும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

அதனுடன் சேர்த்து இந்த வருட ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவலில் கலை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்று தனி நபர்கள், குடும்பங்கள் என அனைத்து வயதினரும் கொண்டாடுவதற்கேற்ப பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்நிகழ்ச்சியானது பிப்ரவரி 8 முதல் 19 வரை சுமார் 12 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா வர்த்தக மற்றும் சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (Sharjah Commerce and Tourism Development Authority- SCTDA) தலைவர் காலித் ஜாசிம் அல் மிட்ஃபா அவர்களின் கூற்றுப்படி, ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவல் ஒவ்வொரு ஆண்டும் அதனை புதுப்பித்துக்கொள்வதால் அமீரகத்தின் வருடாந்திர நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் லைட் ஷோ  மூலம் ஷார்ஜாவின் பண்பாட்டு, அறிவுசார் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் கதைகளைச் சொல்வது, இசை மற்றும் பல்வேறு நிகழ்வுகளை அமீரக மற்றும் சர்வதேச கலைஞர்கள் வழங்குவதற்கான ஒரு மேடையாக ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவல் அமைந்துள்ளது.

மேலும் இந்த லைட் ஃபெஸ்டிவலில் கலந்துகொள்ளும் பார்வையாளர்களுக்கு உணவு, பானங்கள் மற்றும் இனிப்புகள் வரிசையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 12 நாள் கொண்டாட்டத்தில் சுமார் 60,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்ப்பதை ஆணையம் இலக்காகக் கொண்டுள்ளது. அதுபோல, SCTDA விழாவின் செயல்பாடுகளை நிர்வகிக்க குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பார்வையாளர்களுக்கு உதவுவதற்கு 80க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமீரகத்தின் மிகவும் பிரம்மாண்டமான இந்த லைட் ஃபெஸ்டிவல் கொண்டாட்டத்திற்கு ஷார்ஜா முனிசிபாலிட்டி உட்பட எமிரேட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் நிதி உதவி செய்துள்ளன. மேலும், ஷார்ஜா அரசு ஊடகப் பணியகம் ( Sharjah Government Media Bureau) மற்றும் ஷார்ஜா ஒலிபரப்பு ஆணையம் ( Sharjah Broadcasting Authority) போன்ற ஊடக நிறுவனங்களும் நிதியுதவி செய்துள்ளது.

அதேபோன்று பொதுத் துறைகளான ஷார்ஜா போலீஸ் ஜெனரல் கமாண்ட், ஷார்ஜா சிவில் பாதுகாப்பு ஆணையம், ஷார்ஜா மின்சாரம், நீர் மற்றும் எரிவாயு ஆணையம், ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம், BEEAH குழுமம், ஷார்ஜா விமான நிலைய ஆணையம், ஷார்ஜா பல்கலைக்கழக நகரம் மற்றும் ஷார்ஜா இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெரிடேஜ் போன்றவை நிதியளிக்கும் துறைகளின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதேவேளை, சிறப்பாக நடைபெறவுள்ள லைட் ஃபெஸ்டிவலின் போது ஷார்ஜாவின் முக்கிய இடங்கள் (அடையாளங்கள்) ஒளியூட்டப்பட உள்ளன. அதன்படி, ஷார்ஜாவின் 13 அடையாளங்கள் மற்றும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை,

  • பல்கலைக்கழக சிட்டி ஹால் (University City Hall)
  • அல் நூர் மசூதி (Al Noor Mosque)
  • காலித் லகூன் கார்னிச்  (Khalid Lagoon Corniche)
  • ஷார்ஜா மசூதி  (Sharjah Mosque)
  • அல் மஜாஸ் நீர்முனை (Al Majaz Waterfront)
  • ஷார்ஜா கோட்டை (அல் ஹிஸ்ன்) (Sharjah Fort)
  • அல் ஹம்ரியா முனிசிபாலிட்டி கட்டிடம் (Al Hamriyah Municipality building)
  • அல் தைத் கோட்டை (Al Dhaid Fort)
  • கோர்பக்கனில் உள்ள அல் ரஃபிசா அணை (Al Rafisah Dam in Khorfakkan)
  • கல்பா கடிகார கோபுரம் (Kalba Clock Tower)
  • திப்பா அல் ஹிஸ்னில் உள்ள ஷேக் ரஷித் பின் அகமது அல் காசிமி மசூதி  (Sheikh Rashid bin Ahmed Al Qasimi Mosque in Dibba Al Hisn)
  • பீயா குழுமத்தின் தலைமையகம் (Headquarters of the Beeah Group)
  •  தி லைட் வில்லேஜ் (The Light Village)

 

Related Articles

Back to top button
error: Content is protected !!