அமீரக செய்திகள்

“அமீரக மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன்”.. 15 ஆண்டு கால நிறைவையொட்டி அமீரக பிரதமர் வெளியிட்ட செய்தி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமராக பொறுப்பேற்று தற்பொழுது 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகவும், பதவியேற்றதிலிருந்து தற்பொழுது வரையிலும் ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்து சேவைகளையும் செய்துள்ளாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரான மாண்புமிகு ஷேக் முகம்மது அவர்கள் தனது 15 ஆண்டு கால சேவை குறித்து ட்விட்டரில் கூறியதாவது: “எனது சகோதரர், அமீரக ஜனாதிபதி, மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் எதிர்கால நோக்கத்தை நிறைவேற்ற நான் முழுமையாக பணியாற்றியுள்ளேன். மேலும் ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு சேவை செய்ய நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த 15 ஆண்டுகளில் “உள்ளூர் மற்றும் கூட்டாட்சி மட்டங்களில் ஆயிரக்கணக்கான குழுவினர்களுடன் பணியாற்றியபோது பல ஆச்சரியமான விஷயங்கள் நிகழ்ந்தன என்றும், ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியின் தொலைநோக்கு பார்வையை அடைய அவர்கள் அனைவரும் ஒரே அணியாக பணியாற்றினர் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு ஷேக் முகம்மது அவர்கள் பிரதமராக பதவியேற்றதிலிருந்து இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மிக முக்கிய நிகழ்வுகளையும் இந்த தருணத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “நாங்கள் அமீரக அரசாங்கத்தில் மூலோபாய திட்டமிடல் கொள்கைகளை உருவாக்கினோம். 50 க்கும் மேற்பட்ட புதிய சட்டங்கள் மூலம் நம் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய சட்டமன்ற சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அமீரகத்தின் மதிப்பை உயர்த்தவும், அமீரக மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் அமீராக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் சிலவற்றையும் அவர் அந்த செய்திக்குறிப்பில் பட்டியலிட்டுள்ளார்.

  • 500 அரசு சேவைகள் ஸ்மார்ட் சேவைகளாக மாற்றம் கண்டது.
  • மத்திய பட்ஜெட் இரு மடங்கிற்கும் அதிகமாக உயந்திருப்பது (130 சதவீதம்).
  • உலகளவில் 121 குறிகாட்டிகளில் (indicators) ஐக்கிய அரபு அமீரகம் சிறந்தது
  • ஐக்கிய அரபு அமீரக பாஸ்போர்ட், உலகில் வலிமையானது
  • அமீரகத்தில் வசிக்கும் 95 சதவீத மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்
  • ஐக்கிய அரபு அமீரகம் அரபு நாடுகளிலேயே பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய நாடு
  • பிராந்திய ரீதியில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் ஐக்கிய அரபு அமீரகம் சிறந்தது.
  • ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் வீட்டுவசதிக்கு 40 பில்லியன் திர்ஹம்ஸ், கல்விக்கு 140 பில்லியன் திர்ஹம்ஸ், சமூக மேம்பாட்டு திட்டங்களில் 94 பில்லியன் திர்ஹம்ஸ் முதலீடு செய்தது உள்ளிட்ட திட்டங்களை ஷேக் முகம்மது அவர்கள் மேற்கோள்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!