அமீரக செய்திகள்

அபுதாபிக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இலவச PCR பரிசோதனை..!! வெறும் 90 நிமிடங்களில் முடிவை தரும் என தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் தற்பொழுது புதிய இலவச விரைவான PCR கொரோனா சோதனை வசதி தொடங்கப்பட்டுள்ளது. அரேபிய பிராந்தியத்திலேயே முதன் முறையாக விமான நிலைய ஆய்வகமானது சுமார் 90 நிமிடங்களில் முடிவுகளைத் தரும் என்றும், இது உலகின் மிக விரைவான கொரோனா பரிசோதனை என்று அபுதாபி தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தியில், “ஒரு நாளைக்கு 20,000 பயணிகளை சோதிக்கும் திறன் கொண்ட இந்த ஆய்வகம் விமான பயண நடைமுறைகளை எளிதாக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை ஆதரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

pure health மற்றும் Tamouh Healthcare ஆகியவற்றுடன் இணைந்து இந்த PCR சோதனை வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

அபுதாபிக்கு பயணிப்பவர்கள் புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனைக்கான எதிர்மறை சான்றிதழை கொண்டிருக்க வேண்டும். விமான நிலையத்தில் செக் இன் செய்வதற்கு பிரிண்ட் செய்யப்பட்ட இந்த சான்றிதழ் தேவையாகும். அபுதாபி விமான நிலையத்தை அடைந்ததும் அங்கு அனைத்து பயணிகளுக்கும் கூடுதலாக ஒரு PCR சோதனை மேற்கொள்ளப்படும்.

அபுதாபி விமான நிலையத்தில் இருக்கக்கூடிய டெர்மினல்கள் 1 மற்றும் 3 வழியாக விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் இந்த புதிய முறையில் சோதனை செய்யப்படுவார்கள் என்றும் இந்த சோதனை முடிவுகள் SMS மற்றும் வாட்ஸ்அப் மூலம் பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனை முடிவை அல்ஹோஸ்ன் மொபைல் அப்ளிகேஷனில் கிடைக்கப்பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்மறையான PCR பரிசோதனையைப் பெற்று, “green countries” என குறிப்பிடப்பட்டு பட்டியலிடப்பட்டிருக்கும் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்த வேண்டியதில்லை. மற்ற நாடுகளில் இருந்து வரும் அனைவரும் 10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும், மேலும் விமான நிலையத்துடன் இணைக்கப்பட்ட PCR சோதனை கூடாரத்தில் பொருத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட கைபட்டையை (wristband) தங்களது தனிமைப்படுத்தல் காலம் முழுவதும் அணிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அபுதாபி விமான நிலையங்களின் தலைமை நிர்வாக அதிகாரி ஷரீஃப் ஹாஷிம் அல் ஹாஷ்மி இது பற்றி கூறியதாவது: “எங்கள் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, மென்மையான மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை வழங்குவதற்கு பிராந்தியத்திலேயே தொடர்ந்து தேவையான புதிய வழிகளை தேடி தனது சொந்த அர்ப்பணிப்புடன் கூடிய PCR சோதனை ஆய்வகத்தைக் கொண்ட முதல் விமான நிலையம் இது என்பது எங்கள் உறுதிப்பாட்டிற்கு சான்றாகும். புதிய விரைவான சோதனை வசதி … பயணிகளுக்கு நம்பிக்கையுடன் அபுதாபிக்கு பயணிக்க உதவுவது மட்டுமல்லாமல், கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில் எங்கள் செயல்பாடுகளின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

அபுதாபி விமான நிலையத்தில் கொரோனாவிற்காக பின்வரும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • முக அங்கீகார திறன் (facial recognition capabilities) கொண்ட கேமராக்கள், பயணிகள் அல்லது விமான நிலையத்திற்கு வருபவர்கள் COVID-19 இன் அறிகுறிகளைக் கொண்டிருந்தலோ அல்லது முக கவசங்களை அணியவில்லை என்றாலோ ஊழியர்களை எச்சரிக்கும்.
  • பொதுவான கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலமும், சமூக இடைவெளியை ஊக்குவிப்பதன் மூலமும், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPE) வழங்குவதன் மூலமும் பயணிகளுக்கு ஆதரவளிக்க ஆரோக்கிய தூதர்களின் சிறப்பு பயிற்சி பெற்ற குழு (Specially trained team of Wellness Ambassadors) ஒன்று உள்ளது.
  • டச்-லெஸ் லிஃப்ட் தொழில்நுட்பம் (Touch-less elevator technology)
  • ஸ்டெரிக்ஸ்எக்கோ கேட்ஸ் சுத்திகரிப்பு சுரங்கங்கள் (SterixEco Gates sterilisation tunnels)
  • தெர்மல் ஸ்க்ரீனிங் கேமராக்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!