வளைகுடா செய்திகள்

சவூதி: கடுமையாக வீசிய புயலால் நிலைகுலைந்த மக்கள்..!! க்ளாக் டவரை தாக்கிய மின்னல்..!! சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ..!!

சவுதி அரேபியாவில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழையும் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகின்றது. இந்நிலையில் மெக்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை வீசிய கடுமையான புயல் மற்றும் மழையினால் மக்காவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் மக்காவின் புனித மசூதியானது, ஒரே இரவில் பலத்த மழை மற்றும் காற்றால் தாக்கப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்காவில் வீசிய புயலானது மணிக்கு 80 கிலோமீட்டர் (50 மைல்) வேகத்தில் இருந்தது என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுசைன் அல் கஹ்தானி கூறியுள்ளார். மக்காவில் இருந்த வழிபாட்டாளர்கள் புயல் காற்றின் போது நிற்க முடியாமல் தடுமாறும் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


அப்போது அங்கிருந்த மக்கள் காற்று பயங்கரமாக வீசி மழை பெய்ததாகவும் இந்த காற்றில் தங்களால் நிற்க கூட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். பின் புதன் காலைக்குள் திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

அதே போல் சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள புகழ்பெற்ற கடிகார கோபுரத்தில் மின்னல் தாக்கிய வீடியோவானது தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. அதில் வானில் தோன்றும் மின்னலானது க்ளாக் டவரை அடையும் போது அப்பகுதி முழுவதுமே அதீத ஒளியுடன் காட்சியளிப்பதைக் காணலாம்.

இந்த அற்புதமான தருணத்தை புகைப்படக் கலைஞர் யூசுப் பஜ்ஜாஷ் படம் பிடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “மக்காவில் மேகங்கள் உருவாகத் தொடங்கியவுடன், மின்னலின் ஒளியைப் பிடிக்க நான் ஒரு சிறந்த இடத்திற்கு ஏறினேன்.” “மெக்கா கடிகார கோபுரத்தை மின்னல் தொட்ட சரியான தருணத்தைக் கைப்பற்றும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது, இந்த பிரமிக்க வைக்கும் காட்சியை உருவாக்கியது,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சவூதியில் ஆசிர், ஜசான், அல் பஹா மற்றும் மெக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மேகங்கள் மிதமிஞ்சிய முதல் கனமழை பெய்யும் என்றும், ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்திருந்தது. மெக்காவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததாக உள்ளூர் அறிக்கைகளும் உறுதிப்படுத்தியுள்ளன. 

Related Articles

Back to top button
error: Content is protected !!