அமீரக செய்திகள்

சிக்கி தவிக்கும் குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்ப UAE அங்கீகரித்த தடுப்பூசி கட்டாயமில்லை..!! NCEMA அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) மற்றும் அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) ஆகியவை முன்னதாக பயணத்தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக்கொண்ட அமீரக குடியிருப்பாளர்கள் 12 செப்டம்பர் 2021 முதல் அமீரகம் திரும்பலாம் என அறிவித்துள்ளன.

இந்த முடிவு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், நமீபியா, சாம்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, சியரா லியோன், லைபீரியா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளை உள்ளடக்கியது என்று இரு ஆணையங்களும் கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

வரும் பயணிகள் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணையத்தின் இணையதளம் (ICA) மூலம் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் தேவையான ஒப்புதல்களைப் பெறுவதற்கு தடுப்பூசி விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படும் போது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட எதிர்மறை PCR சோதனை முடிவை QR குறியீட்டுடன் , புறப்படுவதற்கு முன்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் பயணிப்பதற்கு முன்ரேபிட் PCR சோதனையையும், நான்காவது மற்றும் எட்டாம் நாளில் மற்றொரு PCR சோதனையையும் மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பயணிகள் பின்பற்ற வேண்டும் என்றும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த நடைமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WHO- வால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தடுப்பூசியும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் பயணத்தடை விதிக்கப்பட்ட நாடுகளில் ஆறு மாதங்களுக்கும் மேலாக தங்கியிருப்பவர்கள், புதிய நுழைவு அனுமதியின் கீழ் நாட்டிற்கு வரலாம் என கூறப்பட்டுள்ளது. அமீரகத்திற்குள் நுழைந்த பிறகு அவர்களின் நிலையை சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போடப்படாத மக்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட மற்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நடைமுறையில் உள்ளன என்று ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!