அமீரக செய்திகள்

UAE: வெளிநாட்டவர்கள் ஒரு ஆப் வழியாகவே பல வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் அனுப்பும் வசதி!! கூடிய விரைவில் வரவிருக்கும் இன்ஸ்டன்ட் பேமண்ட சிஸ்டம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் கூடிய விரைவில் இன்டெர்னல் பேமென்ட் தளத்தின் வழியாக (Internal Payment Platform) ஒரே ஒரு மொபைல் ஆப்பை மட்டுமே பயண்படுத்தி பல வங்கிக் கணக்குகளில் இருந்து, தங்களின் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பணம் அனுப்ப முடியும்.

தற்போது, பணப் பரிமாற்ற நிறுவனங்கள் இன்டெர்னல் பேமென்ட் முறையான இன்ஸ்டன்ட் பேமென்ட் தளத்தை (Instant Payment Platform – IPP) எதிர்நோக்குவதாக அந்நியச் செலாவணி மற்றும் பணம் அனுப்பும் குழுவின் (Foreign Exchange and Remittance Group – Ferg) துணைத்தலைவர் அதீப் அஹம்மது அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த IPP தளமானது ஒரே செயலி மூலம் பல வங்கி கணக்குகளில் இருந்து உடனடி பணப் பரிமாற்றத்தை செயல்படுத்தும்.

இப்போது, அமீரகத்தில் இன்டெர்னல் பேமன்ட் சிஸ்டம் நடைமுறையில் இல்லை என்று கூறிய அவர், இது பயண்பாட்டிற்கு வந்ததும் வாடிக்கையாளர்களின் பல வங்கிக் கணக்குகள் அல்லது வாலட்களில் இருந்து பணத்தை எடுக்க எக்ஸ்சேஞ் நிறுவனங்களை IPP அனுமதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்டண முறையுடன் எக்ஸ்சேஞ் நிறுவனங்களை மத்திய வங்கியின் இன்டெர்னல் பேமன்ட் முறை இணைப்பதால், வாடிக்கையாளரின் விருப்பத்தைப் பொறுத்து அவர்கள் பணத்தை அனுப்பலாம் மற்றும் திரும்பப் பெறலாம் என்று லுலு பைனான்சியல் ஹோல்டிங்ஸின் (LLFH) நிர்வாக இயக்குநராகவும் இருக்கும் அதீப் அஹம்மது விளக்கியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக அளவில் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். அவ்வாறு இருக்கையில், ஒவ்வொரு மாதமும் பில்லியன் கணக்கான திர்ஹம்கள் வெளிநாட்டினரால் அவர்களது குடும்பங்களுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது. இவற்றில் பெரும்பாலும் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிற்கு பணம் அனுப்பப்படுகிறது.

புள்ளி விவரங்களின் படி, ஒட்டு மொத்த பணப் பரிமாற்றங்களில் இப்போது 11 சதவீதம் டிஜிட்டல் சேனல்கள் மூலம் நடைபெறுவது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், புதிய IPP தளம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடைமுறைக்கு வந்ததும் இன்டெர்னல் பேமென்ட் சிஸ்டம் மேலும் வலுப்பெறும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் இந்த அமைப்பு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!