அமீரக செய்திகள்

குளிர்காலம் தொடங்கியதை முன்னிட்டு அமீரகத்தின் பல பகுதிகளில் பரவலாக பெய்த மழை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகாலம் முடிந்து தற்பொழுது குளிர்காலத்திற்கு மாறி வருவதையொட்டி அமீரகத்தின் பல பகுதிகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் பலத்த மற்றும் மிதமான மழை பெய்துள்ளது. இனி வரும் காலங்களில் அமீரகம் முழுவதும் பருவ கால மாற்றத்தை முன்னிட்டு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய அரபு அமீரக வானிலை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துபாயின் ஜுமைரா (Jumeirah), லெஹ்பாப் (Lehbab) மற்றும் ஜபேல் அலி (Jebel Ali), ஷார்ஜாவில் வாடி அல் ஹெலோ (Wadi Al Helo), கோர் ஃபக்கன் (Khor Fakkan) மற்றும் தைத் (Dhaid); கல்பாவின் அஹ்பரா (Ahfara West of Kalba) மற்றும் ஃபுஜைராவில் வாடி மைடாக் (Wadi Maidaq); ராஸ் அல் கைமாவில் மாலேஹா-ஷாவ்கா (Maleha–Shawkah Rd) மற்றும் அல் மனாய் (Al Manaie); அஜ்மானில் அல் ஹெலோ பகுதிக்கு அருகிலுள்ள எமிரேட்ஸ் சாலை மற்றும் அல் ஐன் நகரில் சா பகுதி (Saa area) ஆகிய இடங்கள் அடங்கும்.

அதே போன்று அபுதாபியில், அல் சம்கா (Al Samkha), அல் ரஹ்பா (Al Rahba), அல் பஹியா (Al Bahia), அல் ஷாஹாமா (Al Shahama), அல் ஃபலா (Al Falah), ஷேக் முகமது பின் ரஷீத் சாலை (Sheikh Mohammed Bin Rashid Road) போன்ற பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. அல் அய்னில் இருக்கக்கூடிய அல் ரவ்தா (Al Rawdah), அல் சாத் (Al Sad), ஸ்வீஹான் (Sweihan) மற்றும் குத்ம் அல் சுக்லா பகுதிகளில் (Khutm Al Shukla) மற்றும் அல் கஸ்னாவில் (Al Khazna) மிதமான மழை பெய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை மையத்தில் இருந்து (NCM) டாக்டர் அகமது ஹபீப் அவர்கள் கூறுகையில், “நாளை (திங்களன்று), ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் உள்ள மலைகளில் குறைந்தளவிலான மழை எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை முதல், அதிகாலை நேரங்களில் மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் வானிலை நிலையானதாக மாறும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தென்கிழக்கு திசையில் இருந்து வடகிழக்கு திசைக்கு மிதமான காற்று வீசும் என்றும் இது மணிக்கு 20-30 கிமீ வேகம் முதல், 40 கிமீ வேகம் வரை வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!