அமீரக செய்திகள்

UAE: பாஸ்போர்ட் தகவல் மூலம் உங்களின் விசா நிலையை தெரிந்து கொள்வது எப்படி…?? மிக எளிதான வழிமுறைகள் உள்ளே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்களது விசா வகையை பொறுத்து ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தங்களது விசாவினை புதுப்பித்துக்கொள்வது அவசியமாகும். ரெசிடென்ஸ் விசா காலாவதியாகும் மாதத்தை நம்மில் பெரும்பாலோர் நினைவில் வைத்திருந்தாலும், ​​​​வழக்கமாக தேதியை நினைவில் வைத்திருப்பதில்லை.

பின்னர் காலாவதியாக கூடிய மாதம் நெருங்கும் போது, ​​விசா செல்லுபடியை சரிபார்க்க பாஸ்போர்ட்டின் பக்கங்களைப் புரட்டுவது பலருக்கு வழக்கமாக இருக்கும். விசா நிலையை தெரிந்து கொள்ள இதற்காக நீங்கள் பாஸ்போர்ட்டை எடுத்து பார்க்க வேண்டியதில்லை. உங்களின் பாஸ்போர்ட் தகவல் இருந்தாலே போதுமானது. 

எனவே உங்கள் பாஸ்போர்ட்டின் நகல் அல்லது ஸ்கேன் செய்யப்பட்ட பதிப்பு உங்கள் மொபைலில் சேமிக்கப்பட்டிருந்தாலோ அல்லது பாஸ்போர்ட் எண் மற்றும் காலாவதி தேதி தெரிந்திருந்தாலோ அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணைய இணையதளம் மூலம் விசா நிலையை தெரிந்து கொள்ளலாம்.

விசா இன்னும் செல்லுபடியாகுமா என்பதைச் சரிபார்க்க பாஸ்போர்ட் தகவலை உள்ளிடலாம் மற்றும் ஒரு நபருக்கு வழங்கப்பட்ட அமீரக விசா உண்மையானதா இல்லையா என்பதையும் இதன் மூலம் சரிபார்க்கலாம். 

இவ்வாறு உங்கள் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி விசா செல்லுபடியை காண்பதற்கான முறையின் படிப்படியான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை

படி 1: கீழே உள்ள லிங்கில் செல்லவும் https:/smartservices.ica.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity

படி 2: பின் ‘Passport Information’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதை தேர்ந்தெடுக்கவும்.

படி 3: அதில் ‘Residence’ அல்லது ‘Visa’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 4: பாஸ்போர்ட் எண் மற்றும் பாஸ்போர்ட் காலாவதி தேதியை உள்ளிடவும்.

படி 5: பின்னர் உங்களின் சொந்த நாட்டை உள்ளிடவும்.

படி 6: captcha-வை கிளிக் செய்து இறுதியாக ‘search’ பட்டனை கிளிக் செய்தால் உங்கள் விசா விவரங்களை காலாவதி தேதியுடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!