வளைகுடா செய்திகள்

சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் நாடுகளை இணைக்கும் புதிய ரயில் பாதை திட்டம் விரைவில் அறிமுகம்!!

வளைகுடா நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து வசதிகளை ஒருங்கினைக்கும் விதமாக, அனைத்து வளைகுடா நாடுகளும் தங்கள் நாடுகளில் ரயில் போக்குவரத்தை செயல்படுத்த திட்டங்களை வகுத்து அதற்கேற்ப செயல்படுத்தியும் வருகின்றது.

வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய நாடானதும், அதிக மக்கள்தொகை கொண்ட நாடானதுமான சவுதி அரேபியாவில் ஏற்கனவே ரயில் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு பொதுமக்களின் பயண்பாட்டில் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

அதனை தொடர்ந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகமும் எதிஹாட் ரயில் எனும் பெயரில், நாடு முழுவதும் உள்ள எமிரேட்களை இணக்கும் வகையில் மிகப்பெரிய ரயில் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் இது இன்னும் ஒரு சில வருடங்களில் பொதுமக்களின் பயண்பாட்டிற்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

இந்திலையில், தற்போது பஹ்ரைன் நாடும் சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளை  ரயில் போக்குவரத்து திட்டம் முலம் இணைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி, இவ்விரு நாடுகளுக்கு இடையே ரயில் பாதை திட்டம்  விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக, பஹ்ரைன் போக்குவரத்து அதிகாரிகள் ஜூலை 7-ம் தேதி அன்று GCC இரயில்வே ஆணையத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்து திட்டப் பணிகளை தொடங்குவது குறித்து ஆலோசித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பஹ்ரைன் நாட்டின் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் உதவி துணைச் செயலாளர் ஹுசைன் அலி யாகூப், வளைகுடா நாடுகள் ரயில்வே துறையில் முன்னேறி வருவதையும், நாடுகளுக்கு இடையே புது ரயில் திட்டத்தை தொடங்கவிருக்கும் திட்டத்தையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

மேலும், இந்த கூட்டத்தில் கிங் ஹமாத் காஸ்வே திட்டத்தின் நிலவரம், பஹ்ரைன் ரயில் பாதை திட்டத்தின் நிலவரம் மற்றும் அல் ரம்லியில் உள்ள கிங் ஹமாத் சர்வதேச நிலையத்தின் மேம்பாடு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், GCC பிரதிநிதிகள் சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய இரு ராஜ்ஜியங்களுக்கிடையில் ரயில் பாதை அமைப்பதற்கான பொறியியல் வடிவமைப்புகள் மற்றும் சந்திப்பு புள்ளிகள் பற்றிய விவரங்களையும் விவாதித்துள்ளனர்.

திட்டமிடப்பட்ட இந்த இரயில்வே வலையமைப்பு வளைகுடா நாடுகளுக்குள் இணைப்பை ஏற்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், நாடுகளுக்கு இடையே பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தவும் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், வளைகுடா நாடுகளின் சுற்றுலா துறையும் இதன் மூலம் கணிசமான வளர்ச்சி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

2022 இல் நிறுவப்பட்ட GCC இரயில்வே ஆணையத்திடம், வளைகுடா இரயில்வே நெட்வொர்க்கிற்கான ஒட்டுமொத்தக் கொள்கையை உருவாக்கும் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. மேலும், ரயில்வே திட்டத்தின் சுமூகமான விநியோகம் மற்றும் செயல்பாட்டை உறுதி செய்து அதனை வளைகுடா நாடுகளுடன் விவாதித்து பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் GCC ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!