அமீரக செய்திகள்

மலபார் குழுமத்தின் துணை தலைவர் மற்றும் புகழ்பெற்ற PACE கல்வி குழுமத்தின் தலைவர் மரணம்…

துபாயை தளமாகக் கொண்ட புகழ்பெற்ற இந்திய தொழிலதிபர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல கல்வி நிறுவனங்களின் தலைவரான டாக்டர் PA இப்ராஹிம் ஹாஜி அவர்கள், இன்று (டிசம்பர் 21) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பிறந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த டாக்டர் ஹாஜி மலபார் குழுமத்தின் (Malabar group) இணைத் தலைவராகவும், PACE கல்வி குழுமத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் அவர் Indus மோட்டார் கம்பெனி நிறுவனர் மற்றும் துணைத் தலைவராகவும் மற்றும் மலபார் கோல்டின் முக்கிய முதலீட்டாளர் மற்றும் துணை தலைவராகவும் இருந்துள்ளார்.

78 வயதான டாக்டர் PA இப்ராஹிம் ஹாஜி அவர்கள் கடந்த 55 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் 11 ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் துபாயின் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு நேற்று (டிசம்பர் 20) ஏர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கோழிக்கோடு MIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இந்திய நேரப்படி இன்று காலை 10.15 மணியளவில் அவர் இறந்ததாக நிறுவன மற்றும் கம்யூனிட்டி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “டாக்டர் ஹாஜி உடல்நல குறைபாட்டால் மிக மோசமாக பாதிக்கப்பட்டதால் திங்கள்கிழமை இரவு துபாயில் இருந்து கோழிக்கோட்டில் உள்ள MIMS மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். மரணத்திற்குப் பிறகு அவரை இந்தியாவில் அடக்கம் செய்வதே அவரது விருப்பம் ஆகும்” என்று தெரிவித்துள்ளனர்.

டாக்டர் ஹாஜியின் உடல் இந்திய நேரப்படி மாலை 4 மணி வரை அவரது கோழிக்கோடு இல்லத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் மாலை 6 மணிக்கு (IST) இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!