அமீரக செய்திகள்

UAE: துபாய் விசிட் விசா காலாவதியாக போகிறதா..? செய்ய வேண்டியது என்ன? முழு விபரம் உள்ளே..

அமீரகத்திற்கு விசிட் விசா அல்லது டூரிஸ்ட் விசா மூலம் வருகைத்தரும் நீங்கள்  நாட்டுக்குள் இருந்துக்கொண்டே புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விசா மாற்றுவது எப்படி?

உங்களுக்கு விசா வழங்கிய ட்ராவல் ஏஜென்சி மூலமாக புதிய விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் உங்களுடைய புதிய விண்ணப்பம், பழைய விசாவின் காலாவதி தேதிக்கு 3 முதல் 5 நாட்களுக்குள் ட்ராவல் ஏஜென்சியிடம்  வழங்க வேண்டும்.

விசாவை நீட்டிக்கவும், மாற்றவும் 3௦ அல்லது 9௦ நாட்களுக்குக்கான விண்ணப்பிக்கலாம்.

இதற்கு தேவையான ஆவணங்கள்

  • பாஸ்போர்ட் நகல்
  • பாஸ்போர்ட் அளவிலான தெளிவான புகைப்படம்
  • பழைய விசாவின் நகல்

இந்த விசா நீட்டிப்பு மற்றும் புதிய விசாக்கான கட்டணமானது எமிரேட்களையும் டிராவல் ஏஜென்சி நிறுவனங்களையும் பொருத்து அமையும்.

அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் மற்றும் புஜைரா ஆகிய எமிரேட்களில் உள்ள ட்ராவல் நிறுவனங்களின் கட்டண  விபரம்:

  • உள்நாட்டு டூரிஸ்ட் விசா ஒரு மாதத்திற்கான ஸ்டேட்டஸ் உடன் சராசரியாக 1100 திர்ஹம்ஸ்.
  • உள்நாட்டு டூரிஸ்ட் விசா மூன்று மாதத்திற்கான ஸ்டேட்டஸ் உடன் சராசரியாக 1350  திர்ஹம்ஸ்

துபாய் டூரிஸ்ட் விசாவுக்கு ட்ராவல் நிறுவனங்களின் கட்டண விபரம்:

  • உள்நாட்டு டூரிஸ்ட் விசா ஒரு மாதத்திற்கான ஸ்டேட்டஸ் உடன் சராசரியாக 1500 திர்ஹம்ஸ்.
  • உள்நாட்டு டூரிஸ்ட் விசா மூன்று மாதத்திற்கான ஸ்டேட்டஸ் உடன் சராசரியாக 1800 திர்ஹம்ஸ்.

உங்கள் விசா காலாவதியாகும் நேரத்தில் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் புதிய விசாவுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

எத்தனை நாட்களில் விசா கிடைக்கும்?

இந்த சேவைகளுக்கு கால அளவு 4 முதல் 5 நாட்கள் மட்டுமே. அவசரமாக விசா தேவைப்படவோர் ட்ராவல் ஏஜென்சிகளிடம் கூடுதல் கட்டணங்கள் செலுத்தி உடனடியாக விசாவை பெற்றுக்கொள்ளலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!