வளைகுடா செய்திகள்

குவைத்: வீட்டு பணி்யாளர்கள் 6 மாதத்திற்கும் மேல் நாட்டிற்கு வெளியே இருந்தாலும் நாடு திரும்பலாம்..!! புதிய சலுகையை அறிவித்த அரசு..!!

குவைத் நாட்டில் குடிமக்களால் பணியமறுத்தப்படும் வீட்டு பணியாளர்கள் ஆறு மாதங்களுக்கும் மேல் நாட்டிற்கு வெளியே தங்கினால், அவர்களுக்கு ஆன்லைனில் பெர்மிட் வழங்கும் திட்டத்தினை குவைத் அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஒருங்கிணைந்த அரசாங்க விண்ணப்பத்தின் கீழ் குடிமக்களால் நிதியுதவி செய்யப்படும் வீட்டுப் பணியாளர்களுக்கு நாடு திரும்ப ஆன்லைனில் அனுமதி வழங்கப்படும் என்பதை உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

குவைத் நாட்டின் குடிமக்களுக்கான நடைமுறைகளை எளிதாக்குவதற்கான பாதுகாப்பு நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியே இது என்றும் அமைச்சகத்தின் மக்கள் தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு ஊடகத் துறையும் ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் இதனை, தகவல் அமைப்புகள் பொதுத் துறையின் மனித வளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, குடியிருப்பு விவகார பொதுத் துறையுடன் ஒருங்கிணைந்து, குடிமக்களால் வழங்கப்படும் வீட்டுப் பணியாளர்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக வெளிநாடுகளில் தங்கியிருந்தால் அவர்கள் மீண்டும் நாடு திரும்பலாம் என உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, வீட்டு பணியாளர்கள் 6 மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே இருந்தால், அந்தத் தொழிலாளியின் ரெசிடன்ஸி விசாவை ரத்து செய்வதைத் தவிர்ப்பதற்காக, அவர்களின் ஸ்பான்ஷர்கள் அல்லது குவைத் நாட்டின் குடிமக்கள் தங்கள் வீட்டு பணியாளர்களுக்கு ஆப்சென்ட் சர்டிபிகேட்டை சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு ஆப்சென்ட் சர்டிபிகேட் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அவர்களின் ரெசிடன்ஸி விசா ரத்து செய்யப்படாது என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும், ஆப்சென்ட் சர்டிபிகேட் பெற்று ஆன்லைன் அனுமதியின் மூலம் நாடு திரும்ப, வீட்டு பணியாளர்கள் செல்லுபடியாகும் ரெசிடன்ஸி விசா வைத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுமாறு குவைத் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!