வளைகுடா செய்திகள்

ரமலான் மாதத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட ஓமான்..!!

ஓமானில் கொரோனா நிலைமையைக் கையாளும் பொறுப்பில் உள்ள ஓமானின் உச்சக் குழு, ரமலான் மாதத்தில் வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

ஓமானில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, ரமலான் மாதத்தில் நாட்டில் அமல்படுத்தப்பட வேண்டிய முடிவுகளை உச்சக் குழு எடுத்துள்ளது. இந்த முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

– தராவீஹ் தொழுகை உட்பட அனைத்து தொழுகைகளுக்கும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.  பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட, தடுப்பூசி போடாத நபர்கள் மசூதிக்குள் நுழைவது தடைசெய்யப்படும்.

– மசூதிகள் மற்றும் கூடாரங்கள் மற்றும் பொது சபைகள் போன்ற பிற பொது இடங்களில் இப்தார் அமைப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும்

– முக கவசங்களை அணிவது மற்றும் மசூதிகள் உட்பட மூடிய இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.

– சர்வதேச மற்றும் உள்ளூர் அரங்குகள், மாநாடுகள், கண்காட்சிகள் ஆகியவற்றின் அனைத்து நடவடிக்கைகளும் அதன் திறனில் 70% என்ற அளவில் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

– சுவாச பிரச்சனை உடையவர்கள் குழு பிரார்த்தனை மற்றும் அனைத்து வகையான கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இரண்டாவது டோஸ் எடுத்து ஆறு மாதங்கள் முடித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை பெறுமாறு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை ஓமானின் உச்சக் குழு வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!