அமீரக செய்திகள்

அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கவிருக்கும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் (DSF)..!!

ஒவ்வொரு வருடமும் துபாயில் நடைபெறும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (Dubai Shopping Festival) 26-வது பதிப்பு இந்த வருடம் வரும் டிசம்பர் 17 முதல் அடுத்த வருடம் ஜனவரி 30 வரை நடைபெறும் என்று இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) நிகழ்வுகளானது வார இறுதியான டிசம்பர் 17 ஆம் தேதி ஒரு கோலாகலமான தொடக்கத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வுகளில் உலகப் புகழ்பெற்ற இசை நட்சத்திரங்களின் இசை நிகழ்ச்சிகள், பிரமிக்க வைக்கும் ஒளி மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள், மால்களில் பொழுதுபோக்கு மற்றும் பல புதிய சிறப்பு விழாக்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் பெஸ்டிவல்ஸ் அண்ட் ரீடைல் எஸ்டாபிளிஷ்மென்ட் (DFRE) ஏற்பாடு செய்துள்ள இந்த ஆண்டிற்கான DSF வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கும் என்றும் DSF பங்கேற்கும் அனைத்து மால்கள் மற்றும் நிகழ்வு இடங்களிலும் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துபாய் ஷாப்பிங் விழாவினை முக்கிய ஸ்பான்சர்களான RAK பேங்க் மாஸ்டர்கார்டு மற்றும் முக்கிய பங்குதாரர்கள் ஆதரிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் அல் ஃபுத்தைம் குழு (Dubai Festival City Mall & Festival Plaza), அல் ஸரூனி குழு (Al Zarooni Group) (Mercato Shopping Mall), AW Rostamani Group, Emaar, எமிரேட்ஸ் ஏர்லைன் (Emirates Airlines), Enoc, Etisalat, மஜீத் அல் ஃபுத்தைம் (Mall of the Emirates, City Centre Mirdif, City Centre Deira), Meraas (City Walk, Boxpark, The Beach, The Outlet Village, Al Seef, La Mer) மற்றும் Nakheel Malls (Ibn Battuta Mall, The Pointe, Nakheel Mall, Dragon Mart 2) ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!