அமீரக செய்திகள்

அமீரகத்தில் மீலாது நபியை முன்னிட்டு 4 நாட்கள் பொது விடுமுறையை அறிவித்துள்ள எமிரேட்..!!

அமீரகத்தில் இஸ்லாமியர்களின் இறைதூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாது நபியை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டு அறிவிப்பு வெளியான நிலையில், ஷார்ஜா எமிரேட்டும் அதிகாரப்பூர்வ விடுமுறை தேதிகளை அறிவித்துள்ளது.

அதில் மீலாது நபியை முன்னிட்டு அரசுத்துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் 28 வியாழக்கிழமை முதல் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஷார்ஜா அரசு ஊழியர்களுக்கு பொதுவாகவே 3 நாள் வார விடுமுறை (வெள்ளி முதல் ஞாயிறு வரை) கிடைக்கும் என்பதால் தற்பொழுது அறிவிக்கப்பட்ட வியாழக்கிழமையும் சேர்த்து, அவர்களுக்கு நான்கு நாள் வார இறுதி விடுமுறை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் வரும் அக்டோபர் 2 திங்கட்கிழமை முதல் ஊழியர்கள் பணிக்கு மீண்டும் திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகளில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 29 அன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சனி, ஞாயிறு விடுமுறை உள்ள ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறையும் ஞாயிறு மட்டும் விடுமுறை உள்ள ஊழியர்களுக்கு வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!