வளைகுடா செய்திகள்

வீட்டு தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் இனி கட்டாயமில்லை..!! புதிய தொழிலாளர் ஒப்பந்தங்களுக்கு மட்டுமே கட்டாயம் என சவூதி அறிவிப்பு..!!

சவுதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தங்களை எளிதாக ஆன்லைனிலேயே நிறுவும் வகையில் Musaned தளத்தை நிறுவியது. இதன் மூலம் வீட்டு வேலை செய்யும் தொழிலாளிகள், பணிகளை ஒரு முதலாளியிடம் இருந்து மற்றொரு முதலாளிக்கு எளிதாக மாற்றிக் கொள்ளும் அளவிற்கு பல திட்டங்களை அறிவித்திருந்தது.

ஒப்பந்த பணிகளை எளிதாக்குவதால், முதலாளி மற்றும் தொழிலாளி ஆகிய இருவருக்கும் இந்த ஆன்லைன் சேவையானது பல நன்மைகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில், வீட்டுப் பணியில் சேரும் தொழிலாளர் ஒப்பந்தத்தில் புதிதாக இன்சூரன்ஸ் செய்ய விரும்பினால் Musaned தளத்திலேயே செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பினை அமைச்சகம் வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது வீட்டுப் பணியாளர்களுக்கான இன்சூரன்ஸ் புதிய தொழிலாளர் ஒப்பந்தங்களுக்கு மட்டுமே என்று Musaned தளம் வெளிப்படுத்தி உள்ளது. மேலும் வீட்டுப் பணியாளர் ஒப்பந்தங்களுக்கு இன்சூரன்ஸ் சேவை கட்டாயமில்லை எனவும், அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டது எனவும் தற்பொழுது தெரிவித்துள்ளது.

இந்த பிளாட்ஃபார்ம் மூலம் ஒப்பந்தத்தை பதிவு செய்யும் பொழுது, ​​இன்சூரன்ஸ் சேவையில் நுழைய ஒப்புக்கொள்வதன் மூலம், விருப்பம் இருந்தால் இன்சூரன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த திட்டம் சோதனைக்காக முதல் கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் Musaned வெளியிட்டுள்ள தகவலின் படி, தொழிலாளர்களுக்கான ஒப்பந்தத்தை ஆன்லைனில் பதிவு செய்யும் பொழுது இன்சூரன்ஸை குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும், வீட்டு பணியாளர்கள் சவுதி அரேபியாவிற்கு வந்த பின்னர் இன்சூரன்ஸ் பதிவு செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், தொழிலாளியின் தொழில், மாத ஊதியம், குடியுரிமை, வயது மற்றும் ஒப்பந்தச் செலவு போன்ற பல காரணிகளின் அடிப்படையில் காப்பீட்டுச் செலவு மாறுபடும் என்றும் தளம் விளக்கியது.

ஒருவேளை முதலாளி வீட்டுப் பணியாளரின் வருகைக்குப் பிறகு காப்பீட்டு கொள்கையை ரத்து செய்ய விரும்பினால், அவர் காப்பீட்டு நிறுவனங்களின் ரத்து கொள்கையின்படி நேரடியாக காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!