வளைகுடா செய்திகள்

வெளிநாட்டினரிடம் கறாராக அபராதங்களை வசூலிக்க தொடங்கிய குவைத்… சொந்த ஊருக்கு திரும்ப போகணும்னா இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்..!!

குவைத்தில் நாட்டில் உள்ள வெளிநாட்டினர் ஏதேனும் கட்டணம் அல்லது அபராதம் நிலுவையில் இருந்தால் நாட்டை விட்டு வெளியேறும் முன் அந்தத் தொகையை செலுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் (MoI) ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், செப்டம்பர் 6 முதல், வெளிநாட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் போக்குவரத்து அமைச்சகத்திற்கு செலுத்த வேண்டிய அபராதத்தை அதிகாரிகள் மீட்டெடுக்கத் தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினர் அரசுக்கு செலுத்த வேண்டிய அபராதங்களை வசூலிக்கும் இந்த முயற்சியில் அரசு நிறுவனங்கள் இணைந்து செயல்படுமாறு முதல் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, வெளிநாட்டவர்கள் புறப்படுவதற்கு முன் தகவல் தொடர்பு அமைச்சகத்திடம் செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள அபராதங்களை செலுத்தும் நடைமுறையை உள்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.

முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் கலீத் அல்-அஹ்மத் அல்-சபா இது குறித்து கூறும் பொழுது, எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் ஒவ்வொரு வெளிநாட்டவரும் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் இணையதளம் அல்லது ‘சஹ்ல்’ விண்ணப்பம் மூலம் வெளிநாட்டவர்கள் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கைப் பேணுவதற்கு அரசு தனது கடமையைச் செய்யத் தயங்காது என்பதால், நிறுவப்பட்ட சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டு, அவற்றை மீறாதபடி அபராத தொகையை முறையாக செலுத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, MoI இன் அதிகாரப்பூர்வ பயன்பாடு அல்லது மின்னணு போர்ட்டல் அல்லது பொதுப் போக்குவரத்துத் துறையுடன் இணைந்த அலுவலகங்களில் அபராதம் செலுத்தலாம் எனவும், பயணம் செய்யும்பொழுது செலுத்த வேண்டும் என நினைத்தால் குவைத் சர்வதேச விமான நிலையம் மற்றும் பிற தரை மற்றும் கடல் துறைமுகங்களில் அமைந்துள்ள சேகரிப்பு மையங்களிலும் பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினர் தங்கள் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை ஆன்லைனில் MEW-PAY அல்லது Sahel மொபைல் செயலி அல்லது குவைத் சர்வதேச விமான நிலையத்தின் T4 முனையத்தில் உள்ள வாடிக்கையாளர் சேவை அலுவலகத்தில் செலுத்தலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!