வளைகுடா செய்திகள்

குவைத்: பணி அனுமதிகளை இனி ஈஸியா திருத்தம் செய்ய முடியாது… புதிய அறிவிப்பினை வெளியிட்ட அமைச்சகம்!

குவைத் நாட்டில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் பணி அனுமதிகளில் (work permit) ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமானால் பின்பற்ற வேண்டிய புது விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில் மனிதவளத்திற்கான பொது அதிகாரசபையானது வெளிநாட்டினருக்கான ஒர்க் பெர்மிட்டில் எவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை கூறியுள்ளது.

குறிப்பாக தொழிலாளியின் பெயர், பிறந்த தேதி மற்றும் நேஷனாலிடி போன்றவற்றில் திருத்தம் செய்ய வேண்டுமானால் முன்பு போல் நேரடியாக வொர்க் பெர்மிட்டில் விவரங்களை மாற்றுவது தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக முதலாளிகள் குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.

அதன்படி ஒர்க் பெர்மிட் வழங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் ஏதேனும் திருத்தம் இருந்தால் Ashal சேவை மூலம் தொழிலாளியின் தற்போதைய விசாவை ரத்து செய்வதற்கு முதலில் முதலாளிகள் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், தரவுத்தளத்தில் பணியாளரின் தகவலைப் புதுப்பித்து புதிய பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க அவர்கள் உள்துறை அமைச்சகத்திற்குச் செல்ல வேண்டும். இந்த முன்முயற்சியானது மனிதவளத்திற்கான பொது ஆணையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கூட்டு முயற்சியால் தற்பொழுது நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

வொர்க் பெர்மிட்டுகளில் தொழிலாளிகளின் பெயர், பிறந்த தேதி மற்றும் நாடு ஆகியவற்றில் மோசடி செய்வதை தடுக்கும் பொருட்டில் இந்த புது நடைமுறையானது தற்பொழுது அமல்படுத்தப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் வேலை அனுமதி வழங்குவதற்காக தடைசெய்யப்பட்ட அல்லது இடைநிறுத்தப்பட்ட நாடுகளில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை தடை செய்வது இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்த சேவையோடு கூடுதலாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வருகை விசாக்களை ரத்து செய்ய அனுமதிக்கும் புதிய மின்னணு சேவையையும் அதிகாரசபை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிகாரத்தின் மின்னணு படிவங்கள் போர்டல் மூலம் பயனர்கள் இந்தச் சேவையை அணுகலாம், அங்கு அவர்கள் “வேலை விசாவை ரத்துசெய்தல்” விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து தேவையான விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு கொடுக்கப்பட்ட தகவல் சரியானதா என்பதை சரி பார்த்து பின்பு சமர்ப்பிக்கலாம். விசா ரத்து செய்யப்படும் செயல்முறைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த புதிய மின்னணு சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!