அமீரக செய்திகள்

அமீரகம் முழுவதும் இன்று கடுமையான தூசிப்புயல்..!! பொதுமக்கள் அவதி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக தூசிப்புயல் உருவாகி வரும் நிலையில் இன்றும் வானிலை மையம் அமீரகத்தில் தூசி எச்சரிக்கை விடுத்திருந்தது. அதே போல் அமீரகத்தில் பரவலாக இன்று முழுவதும் கடுமையான தூசிப்புயல் வீசி வருகிறது. மணிக்கு 40 கிமீ வேகத்தில் வீசும் காற்றின் காரணமாக சில பகுதிகளில் அரை கிலோமீட்டருக்கு தெரிவுத்திறன் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி,  அபுதாபியின் உம் ஷீஃப் பகுதியில் தெரிவுத்திறன் 500 மீட்டருக்கும் குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அல் தஃப்ரா பகுதியிலும் தெரிவுத்திறன் மிகவும் குறைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீவுகள், சில கடலோர மற்றும் உள் பகுதிகளில் குறிப்பாக மேற்கு பகுதிகளில் இன்று இரவு 10 மணி வரை கிடைமட்டத் தெரிவுநிலை 1 கி.மீ.க்கும் குறைவாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டுமல்லாது குவைத், கத்தார் போன்ற மற்ற அண்டை நாடுகளிலும் கடந்த சில நாட்களாக கடுமையான தூசிப்புயல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தில் நிலவி வரும் இந்த கடும் புயலால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கும் வாகனங்களை ஓட்டுவதற்கும் மிகவும் சிரமமாக இருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!