வளைகுடா செய்திகள்

விவசாயத்தில் புரட்சி செய்யும் ஓமான்… 7,000 டன்கள் கோதுமை சாகுபடிக்கு இலக்கு..!!

ஓமானில் கடந்த 2023-ஆம் ஆண்டின் முடிவில் கோதுமை சாகுபடியில் 7,000 டன்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 2022 ஆம் ஆண்டில் 2,167 டன்களாக இருந்த கோதுமை சாகுபடியினை மூன்று மடங்கு அதிகரித்து 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 7,000 டன்களாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஓமான் விவசாயத்துறை தெரிவித்ததன்படி நாட்டின் உணவு பாதுகாப்பை மேம்படுத்துதல், விவசாயத் துறை வளர்ச்சி அடைய செய்தல் மற்றும் ஓமான் விவசாயிகளுக்கு வருமானம் வரும் வகையில் புதிய வழியினை ஏற்படுத்துதல் ஆகிய காரணங்களுக்காக கோதுமை உற்பத்தியானது ஊக்குவிக்கப்படுகின்றது என்று தெரிவித்துள்ளது.

எனவே இந்த இலக்கினை அடைய விவசாயிகளுக்கு உதவி புரியும் வகையில் கோதுமை சாகுபடிக்காக ஒதுக்கப்படும் நிலங்களின் பரப்பளவை அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது 2022 ஆம் ஆண்டில் 2,422 ஏக்கரில் பயிரிடப்பட்ட கோதுமையானது 2023 ஆம் ஆண்டில் 6,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1,900 விவசாயிகள் கோதுமை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோதுமை உற்பத்திக்காக 5 மில்லியன் ரியால் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் கோதுமை விளைச்சலை அதிகரிக்க அதிக மகசூல் தரும் கோதுமை வகைகளை விவசாயிகளுக்கு அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் கோதுமை வளர்வதற்கான நீர், வளமான மண் மற்றும் தட்பவெட்ப நிலை குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு தெரிவித்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் கோதுமை வளர்ச்சிக்கு தேவையான விதைகள்,உரங்கள் மற்றும் களைக்கொல்லிகளை வாங்குவதற்கு விவசாயிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது.

மேலும் கோதுமை வளர்ச்சிக்கு தேவையான சொட்டுநீர் பாசன முறை போன்ற அதில் நவீன தொழில்நுட்பங்களை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றது. கோதுமை விளைச்சலுக்கு வந்தவுடன் அவற்றை சந்தைப்படுத்துவதற்கான முறைகளையும் அரசு யோசித்து வருகின்றது. நவீன மாவு ஆலைகளை நாட்டிலேயே அமைத்து அதன் மூலம் மாவை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே ஓமன் நாட்டின் விவசாய துறையில் கோதுமை குறிப்பிட்ட மாற்றத்தினை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!