அமீரகத்தில் மீலாது நபியை முன்னிட்டு அடுத்த வாரம் பொது விடுமுறை..!! அறிவிப்பை வெளியிட்ட அரசு..!!
உலகம் முழுவதும் இஸ்லாமிய சமூகத்தினர் கொண்டாடும் திருநாளான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளான மீலாது நபியை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 27 அன்று நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் அதாவது மீலாது நபி கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானில் தோன்றும் நிலவினைப் பொறுத்து இந்த தேதியானது உறுதி செய்யப்படும் என அறிவித்திருந்தாலும் குடியிருப்பாளர்கள் இதனை முன்னிட்டு, எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு தற்பொழுது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் மூன்று நாள் வார விடுமுறையை பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுகிறது எனும்போது, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை இணைத்து மூன்று நாள் வார விடுமுறையை குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இது சனி மற்றும் ஞாயிறு விடுமுறை உள்ளவர்களுக்கே மூன்று நாட்கள் விடுமுறை பொருந்தும். சனிக்கிழமை வேலை நாள் கொண்டவர்களுக்கு இது இரண்டு நாட்கள் விடுமுறையை தரும்.
அத்துடன், இது அதிகாரப்பூர்வ பொது விடுமுறை என்பதால், ஊழியர்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.