அமீரக செய்திகள்

UAE: ஏர்போர்ட் முழுவதும் பயணிகள் அணுகக் கூடிய செல்ஃப் சர்வீஸ் மற்றும் ஸ்மார்ட் சேவைகள்… புதிய டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ள ஷார்ஜா விமான நிலையம்…

ஷார்ஜா விமான நிலையத்தில் பயணிகளின் போக்குவரத்தையும் செல்பாடுகளையும் எளிதாக்க நவீன அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு உள்ள செல்ஃப் சர்வீஸ் கியோஸ்க்குகள் மற்றும் ஸ்மார்ட் கேட்கள் மூலம், செக்-இன் முதல் பேக்கேஜ் டிராப், பாஸ்போர்ட் கட்டுப்பாடு மற்றும் போர்டிங் வரை பயணிகள் அனைத்தையும் தாங்களாகவே செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பயணிகள் விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும், விமான நிலையத்தில் பயணிக்கும் நபர்கள் அமீரகக் குடியிருப்பாளர்களா அல்லது சுற்றுலாப் பயணிகளா என்பதைப் பொருட்படுத்தாமல், அனைத்து ஏர் அரேபியா பயணிகளுக்கும் இந்த செல்ஃப் சர்வீஸ் கிடைக்கும் என்று விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பயணிகளின் விமான நிலைய அனுபவத்தை சிறப்பானதாக்க விமான நிலையம் முழுவதும் பல்வேறு செல்ஃப் சர்வீஸ் வசதிகள் இயக்கப்படுகின்றன. அவை என்னென்ன என்பது பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

செக்-இன்

  • விமான நிலையத்தில் உள்ள செல்ஃப்-செக்-இன் கியோஸ்க்குகளில்  பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்யலாம் அல்லது பயணிகளின் பெயர் பதிவை (PNR) உள்ளிடலாம்.
  • பயணிகளின் விவரங்கள் அங்கீகரிக்கப்பட்டதும், போர்டிங் பாஸ் மற்றும் பேக் டேக் (bag tag) பிரிண்ட் செய்யப்படும்.

பேக்கேஜ் டிராப் (Baggage drop):

பயணிகள் விமான நிலையத்தில் சுய-செக்-இன் கியோஸ்க்கைப் பயன்படுத்தும் போது தங்கள் பைகளில் டேக்கை பிரிண்ட் செய்யலாம். ஆனால், அவர்கள் ஆன்லைனில் செக்-இன் செய்யப்பட்டிருந்தால், பைகளில் டேக்கை அச்சிடுவதற்கு ‘Tag and Fly’ கியோஸ்கிற்குச் சென்று, பின்னர் செல்ஃப்-பேக்கேஜ் டிராப் கவுண்டருக்குச் செல்லலாம்.

அதுமட்டுமில்லாமல், பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு பகுதிக்கு முன், செயல்முறையை சீராக்க ஆட்டோமேட்டிக் போர்டிங் கார்டு வேலிடேட்டர் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாஸ்போர்ட் கட்டுப்பாடு:

பயணிகள் ஸ்மார்ட் கேட்கள் மூலம் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு செயல்முறைகளை விரைவாகவும் எளிதாகவும் முடிக்கலாம்.

  • பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டின் புகைப்படப் பக்கத்தை இ-ரீடரில் ஸ்கேன் செய்ய வேண்டும்.
  • பின்னர், பார்கோடை இ-ரீடர் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.
  • அதையடுத்து, ஸ்மார்ட் கேட்டிற்குள் நுழைந்து, நியமிக்கப்பட்ட பகுதியில் நின்று கேமராவைப் பார்க்க வேண்டும்.
  • இறுதியாக அனைத்து நடைமுறைகளும் முடிந்ததும், ஸ்மார்ட் கேட் தானாகவே திறக்கப்படும்.

போர்டிங்

பயணிகள் போர்டிங் செயல்முறையை எளிதாக முடிக்க எலக்ட்ரானிக் கேட்களுக்கு செல்லலாம்.

ஸ்மார்ட் இன்ஃபர்மேஷன் டெஸ்க்:

ஷார்ஜா ஏர்போர்ட் அத்தாரிட்டியானது (SAA) பயணிகளும் வாடிக்கையாளர்களும் விமான நிலையத்தில் உள்ள வாடிக்கையாளர் சேவை ஊழியர்களை விர்ச்சுவலாக தொடர்பு கொள்ள உதவும் ‘ஸ்மார்ட் இன்ஃபர்மேஷன் டெஸ்க் ‘ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விமான நிலைய பயணிகளுக்கு தடையற்ற பயண அனுபவத்தை வழங்க ஆணையம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்றும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் இது பயணிகளின் பயண நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மிகவும் திறமையானதாக்குகிறது என்று அவர் கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!