அமீரக செய்திகள்

துபாய்: ஒரே இரவில் 2 மில்லியனுக்கும் மேல் பொது போக்குவரத்தை பயன்படுத்திய மக்கள்..!! RTA வெளியிட்ட புள்ளிவிபரம்..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA) 2023 ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 2 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பொது போக்குவரத்தை உபயோகப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி 2,166,821 பயணிகள் டாக்ஸிகள் உள்ளிட்ட RTA-ன் பொது போக்குவரத்தை பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு பயன்படுத்திய 1,632,552 பயணிகளுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் விபரங்கள் பின்வருமாறு:

மெட்ரோ: 958,161 பயணிகள் (கடந்த ஆண்டு 640,175 பயணிகள்)

டிராம்: 49,855 பயணிகள் (கடந்த ஆண்டு 34,672 பயணிகள்)

பொது பேருந்துகள்: 395,930 பயணிகள் (கடந்த ஆண்டு 331,837 பயணிகள்)

கடல் போக்குவரத்து : 77,844 பயணிகள் (கடந்த ஆண்டு 50,398 பயணிகள்)

இ-ஹைலர் (E-Hailer): 125,651 பயணிகள் (கடந்த ஆண்டு 96,937 பயணிகள்)

டாக்ஸி: 558,079 பயணிகள் (கடந்த ஆண்டு 476,831 பயணிகள்)

ஷேர்டு மொபிலிட்டி (Shared Mobility): 1,301 பயணிகள் (கடந்த ஆண்டு 1,011 பயணிகள்).

துபாயில் சர்வதேச மற்றும் உள்ளூர் நிகழ்வுகளைப் பாதுகாப்பதற்கான செயற்குழுவுடன் இணைந்து RTA வகுத்த விரிவான திட்டத்தின் மூலம் புத்தாண்டு கொண்டாட்டப் பகுதிகளுக்கு பொதுப் போக்குவரத்து பயணிகளை ஏற்றிச் செல்வது சீராகச் சென்றது என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் மெட்ரோ சேவையானது 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கியதாகவும், மேலும் 200 க்கும் மேற்பட்ட பேருந்துகள் பயணிகளை கொண்டாட்டம் நடைபெற்ற இடங்களிலிருந்து நிகழ்விற்காக நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களுக்கு ஏற்றிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!