அமீரக செய்திகள்

துபாயில் நோல் கார்டை எங்கெல்லாம் பயன்படுத்தலாம்? பத்து இடங்களின் பட்டியலை வெளியிட்ட RTA..!!

துபாயில் வசிக்கும் அமீரக குடியிருப்பாளரா நீங்கள்? உங்களிடம் உள்ள நோல் கார்டைப் பயன்படுத்தி துபாயில் உள்ள பல்வேறு இடங்கள் மற்றும் பல சேவைகளுக்கு பணம் செலுத்த முடியும் என்பது தெரியுமா? உங்களின் நோல் கார்டு மூலம் பணம் செலுத்தக் கூடிய 10 இடங்களின் பட்டியலை RTA தனது இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது. அதனை பின்வருமாறு காணலாம்.

1. பொது போக்குவரத்து

RTA பொதுப் பேருந்துகள், துபாய் மெட்ரோ, துபாய் டாக்ஸி, டிராம் மற்றும் துபாய் ஃபெர்ரி, அப்ரா, வாட்டர் பஸ் மற்றும் வாட்டர் டாக்ஸி போன்ற போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தும் போது நோல் கார்டை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

2. பார்க்கிங்

உங்கள் நோல் கார்டு மூலம் துபாய் எமிரேட் முழுவதும் உள்ள பார்க்கிங் மீட்டர்களில் பார்க்கிங் கட்டணத்தை செலுத்தலாம்

3. பல்பொருள் அங்காடிகள்

கேரிஃபோர், லுலு மற்றும் அஸ்வாக் போன்ற பல்பொருள் அங்காடிகளும், ஜூம் (zoom) மற்றும் சர்க்கிள் கே போன்ற கன்வீனியன்ஸ் ஸ்டோர்களும் நோல் கார்டு பேமண்ட் முறையை ஏற்கின்றன.

4. உணவகம் மற்றும் கஃபேக்கள்

குளோரியா ஜீன்ஸ், பர்கர் கிங், மிஸ்டர் பேக்கர் மற்றும் பாவோஸ் பிஸ்ஸா ஆகியவை எமிரேட்டில் நோல் கார்டுகளை ஏற்றுக்கொள்ளும் சில உணவு விற்பனை நிலையங்கள் ஆகும்.

5. சுகாதார வசதி 

எமிரேட் முழுவதும் உள்ள மெட்கேர் கிளினிக்குகளிலும், நகரத்தில் உள்ள பல்வேறு மருந்தகங்களிலும் நோல் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.

6. கார் சேவை

நாடு முழுவதும் உள்ள Autopro இடங்களில் நோல் கார்டு மூலம் பணம் செலுத்தி, உங்கள் காரை சர்வீஸ் செய்யலாம் அல்லது பழுதுபார்க்கலாம்.

7. தீம் பார்க்

துபாயில் உள்ள தீம் பார்க்கான IMG வேர்ல்ட்ஸ் ஆஃப் அட்வென்ச்சர் பணம் செலுத்தும் முறையாக நோல் கார்டை ஏற்றுக்கொள்கிறது.

8. பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகம்

துபாய் குடியிருப்பாளர்கள் க்ரீக் பார்க், முஷ்ரிப் பார்க் மற்றும் ஜபீல் பார்க் போன்ற பொது பூங்காக்களுக்குள் நுழைய நோல் கார்டுகளைப் பயன்படுத்தலாம். அதேபோல், எதிஹாட் அருங்காட்சியகத்திற்குள் நுழைவதற்கும் அவற்றைப் பயன்படுத்தலாம்.

9. பெட்ரோல் நிலையங்கள்

துபாய் முழுவதும் உள்ள ENOC பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் தங்களின் நோல் கார்டுகளை பயன்படுத்தலாம்.

10. வாகன சோதனை

RTA வாகன சோதனை மையங்களில் தங்களின் வாகன சோதனைக்கான கட்டணத்திற்கு நோல் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.

அதேபோன்று குடியிருப்பாளர்கள் தங்களின் நோல் கார்டுகளை எமிரேட் முழுவதும் உள்ள மெட்ரோ நிலையங்கள் மற்றும் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் டாப் அப் செய்து கொள்ளலாம். மேலும், நோல் கார்டை உங்கள் மொபைலில் டாப் அப் செய்ய ‘Nol Pay’ மொபைல் அப்ளிகேஷனையும் பயன்படுத்தலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!