அமீரக செய்திகள்

அடுத்த மாதம் தொடங்கும் ‘ஷார்ஜா ஷாப்பிங் ப்ரோமோஷன்ஸ் – 2023’.. அதிகாரப்பூர்வ தேதியை வெளியிட்ட SCCI..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி ஆகிய எமிரேட்களில் ஷாப்பிங் ப்ரோமோஷன்ஸ் களைகட்டிவரும் நிலையில், ஷார்ஜா குடியிருப்பாளர்களுக்கு எண்ணற்ற தள்ளுபடிகளை வழங்கும் ‘ஷார்ஜா ஷாப்பிங் ப்ரோமோஷன்ஸ் – 2023’ எதிர்வரும் டிசம்பர் 15ம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மேலும் ஒரு மாத காலம் நடைபெறவுள்ள இந்த ஷாப்பிங் ப்ரோமோஷன்ஸ் ஜனவரி 20, 2024 வரை நடைபெறும் என்றும், இந்த தள்ளுபடி விற்பனை காலத்தில் குடியிருப்பாளர்கள் தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழலாம் என்றும் ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (SCCI) நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று அறிவித்துள்ளது.

அத்துடன், ஷார்ஜாவின் பிராந்தியங்கள் மற்றும் நகரங்களில் நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்பதன் மூலம், வருவாயை அதிகரிக்கவும் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும் அனைத்து ஷார்ஜா ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் வணிகக் கடைகளுக்கு SCCI அழைப்பு விடுத்துள்ளது.

ஷார்ஜா எமிரேட்டில் உள்ள பல அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் SCCI ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஷார்ஜா ஷாப்பிங் ப்ரோமோஷன்-2023 ஆனது, சில்லறை விற்பனைத் துறை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. கூடவே, பார்வையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை இது வழங்கும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ப்ரோமோஷன் மற்றும் பரிசுகள்:

பல்வேறு தயாரிப்புகள் மற்றும் உலகளாவிய பிராண்டுகளுக்கு தள்ளுபடிகளை வழங்கும் இந்தத் திட்டம், குளிர்கால விழாக்களில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள், அடையாளங்கள் மற்றும் ஷார்ஜா எமிரேட் முழுவதும் உள்ள முக்கிய ஷாப்பிங் மையங்கள் ஆகியவற்றால் நடத்தப்படுகிறது. எனவே, ஷாப்பிங் செய்பவர்கள் எமிரேட் முழுவதிலும் உள்ள ஷாப்பிங் மால்களில் ஏராளமான சலுகைகள் மற்றும் பரிசுகளைப் பெறலாம்.

ஷார்ஜா சில்லறை விற்பனைத் துறையின் வருடாந்திர நாட்காட்டியில் உள்ள பல வணிக மற்றும் பொழுதுபோக்கு விழாக்களின் வரிசையில், ஷாப்பிங் ப்ரோமோஷன் நிகழ்வு முதன்மையான நிகழ்வாகும் என்று SCCI இன் டைரக்டர் ஜெனரல் முகமது அஹ்மத் அமின் அல் அவாடி கூறியுள்ளார்.

இது குறித்து ஷார்ஜா சேம்பரின் தகவல் தொடர்பு மற்றும் வணிகத் துறையின் உதவி இயக்குநர் அப்துல் அஜீஸ் முகமது ஷத்தாஃப் கூறுகையில், அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் விளம்பரச் சலுகைகளை வழங்கும் இந்த நிகழ்வின் சிறந்த பதிப்பை பார்வையாளர்களுக்கு வழங்க ஏற்பாட்டுக் குழு தொடர்ந்து பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!