அமீரகத்தில் தொடங்கவிருக்கும் மிகப்பெரிய 11.11 விற்பனை டீல்கள்!! ஏராளமான பொருட்களுக்கு 70% வரை தள்ளுபடி….
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷாப்பிங் பெஸ்டிவல் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்காக குறிப்பிட்ட காலத்திற்கு பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வரும் அமீரகக் குடியிருப்பாளர்கள், நவம்பர் 11 ஆம் தேதி ஷாப்பிங் பெஸ்டிவலில் மிகப்பெரிய 11.11 சேல் மூலம், பெரிய தள்ளுபடிகளைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
அமீரகத்தில் இருக்கக்கூடிய சில்லறை விற்பனையாளர்கள் தனிப்பட்ட பராமரிப்பு, எலக்ட்ரானிக்ஸ், பொம்மைகள், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் F&B போன்ற ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், அவர்கள் உள்ளூர் வங்கிகளுடன் கூட்டாண்மை வைத்துள்ளதால், நீங்கள் தவணைகளில் பணம் செலுத்த அனுமதி உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இ-காமர்ஸ் நிறுவனங்கள் 1 திர்ஹம் முதல் தொடங்கும் டீல்கள் மூலம், சில அற்புதமான சலுகைகளை வழங்கியுள்ளனர். குறிப்பாக, பிராண்டட் டாப்ஸ் மற்றும் டி-ஷர்ட்டுகள் 9 திர்ஹம்சுக்கு வாங்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இவற்றுடன் அமீரகத்தை தளமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான Noon.com அதன் மிகப்பெரிய 11.11 விற்பனையுடன் பல தயாரிப்புகளுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மீது 50 சதவீதம் வரை தள்ளுபடியையும், டிவி, லேப்டாப் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடியையும், சிறந்த உணவகங்களில் 60 சதவீதம் மற்றும் சுகாதாரப் பொருட்கள் மீது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது.
அதேபோல், அலிபாபா குழுமத்தின் ஒரு பகுதியான அலி எக்ஸ்பிரஸ், அதன் 11.11 விற்பனையில் 10,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் 50 வரை தள்ளுபடியை வழங்குவதாகக் கூறியுள்ளது.
இது இலவச ஷிப்பிங்கை வழங்குவதுடன் டெலிவரி காலம் 10 முதல் 12 வேலை நாட்களுக்கு மேல் இல்லை என்றும் உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், புதிய பயனர்கள் சிறப்பு சலுகைகளைப் பெறுவார்கள். இந்த விற்பனை நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி நவம்பர் 18ஆம் தேதி நிறைவடையும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
தள்ளுபடி விற்பனையின் வரிசையில் அடுத்ததாக இருப்பது Amazon. எலக்ட்ரானிக்ஸ், வீட்டு அலங்காரம், சமையலறை, அழகு, ஃபேஷன் மற்றும் விளையாட்டு உட்பட 30 க்கும் மேற்பட்ட வகைகளில் ஆயிரக்கணக்கான தயாரிப்புகளுக்கான அற்புதமான டீல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விற்பனை நவம்பர் 12ம் தேதி வரை நடைபெறும்.
மேலும், எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனையாளர் ஷரஃப் டிஜி (sharaf DG), பிராண்ட்ஸ் ஃபார் லெஸ், கேரிஃபோர், ஷீன் மற்றும் பல சில்லறை விற்பனையாளர்கள் 11.11 தள்ளுபடிகளை அறிமுகப்படுத்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel