அமீரக செய்திகள்

UAE: வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!! சிவில் பாதுகாப்பு வாகனங்களை தடுத்தால் 50,000 திர்ஹம்ஸ் அபராதம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிவில் பாதுகாப்பு வாகனங்களுக்கு போதுமான இடத்தை விடாமல் இருப்பது அல்லது அவற்றின் செயல்பாட்டை சீர்குலைக்கும் வகையில் அணுகலைத் தடுப்பது போன்ற விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அபுதாபி குடிமைத் தற்காப்பு (Abu Dhabi Civil Defence) நினைவூட்டலை வழங்கியுள்ளது.

மேலும், அபராதம் விதிக்கப்பட்ட பிறகு, கிடங்குகள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு தவறைத் திருத்துவதற்கு குறிப்பிட்ட காலக்கெடு வழங்கப்படும், அப்போது இணங்கத் தவறுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அதேபோல், ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் போன்ற அவசரகால வாகனங்களுக்கு சாலைகளில் முன்னுரிமை அளிக்காமல் வழிவிடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு 3,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படுவதுடன் 6 பிளாக் பாயிண்ட்கள் மற்றும் வாகனங்கள் 30 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், பேரிடர், அவசரநிலைகள், விபத்துகள் மற்றும் மழை வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்குகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் மீட்பு வாகனங்களுக்கு இடையூறு விளைவிப்பது மற்றும் அதிகாரிகளைத் தடுப்பது போன்ற நடத்தைகளில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது 1,000 திர்ஹம் அபராதம், நான்கு பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படுவதுடன் அவர்களது வாகனங்கள் 60 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தில் முன்னதாக, அவசரகால வாகனங்களுக்கு வழிவிடத் தவறியதால் விபத்து அல்லது தீச்சம்பவம் ஏற்பட்ட இடங்களை அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டியுள்ளனர். எனவே, ஆம்புலன்ஸ், காவல்துறை வாகனங்கள் போன்ற அவசரகால வாகனங்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!