அமீரக செய்திகள்

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு டிசம்பர் 3 வரை சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தும் குளோபல் வில்லேஜ்..!!

ஐக்கிய அரபு அமீரகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி அதன் தேசிய தினத்தை கொண்டாட உள்ள நிலையில், துபாயின் குளோபல் வில்லேஜ் டிசம்பர் 3 வரை கலாச்சார நிகழ்ச்சிகள், தேசிய தினம் குறித்த செயல்பாடுகள் மற்றும் சிறப்பு பொழுதுபோக்குகளுடன் நாட்டின் தேசிய தினத்தை கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளது.

எனவே, குளோபல் வில்லேஜ்ஜின் பிரதான மேடையில் ஓபரெட்டா (operetta) ‘UAE’s Vision’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது அமீரகத்தின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நாட்டின் சாதனைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கொண்டாடப்படவுள்ளது.

மேலும், யோலா மற்றும் அய்யாலா போன்ற உண்மையான எமிராட்டி கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாகவும் குளோபல் வில்லேஜ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் விருந்தினர்கள் மருதாணி கலை, தீம் செய்யப்பட்ட உடை, போட்டோ பூத் போன்றவற்றின் பாப்-அப் கியோஸ்க்குகளையும் பார்வையாளர்கள் இங்கே அனுபவிக்க முடியும்.

அதுமட்டுமில்லாமல், UAE, 971 பை தி கம்யூனிட்டி, கலீஃபா அறக்கட்டளை மற்றும் ஹம்தான் ஹெரிடேஜ் சென்டர் போன்ற பெவிலியன்களில் இருந்து தனித்துவமான தேசிய தின பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் குடியிருப்பாளர்கள் பெறுவார்கள். அதேசமயம், குளோபல் வில்லேஜ் முழுவதும் உள்ள பாரம்பரிய உணவகங்களில் பல வகையான உணவுகளையும் சுவைக்க முடியும்.

குறிப்பாக, தேசிய தினத்தை கொண்டாடும் விதமாக குளோபல் வில்லேஜ் ஐக்கிய அரபு அமீரகக் கொடியின் வண்ணங்களில் அலங்கரிக்கப்படவுள்ளது. மேலும் அரேபியன் சதுக்கம் மற்றும் வேர்ல்டு அவென்யூ ஆகியவை எமிராட்டி கலாச்சாரத்தை கொண்டாடும் தீம்களால் அலங்கரிக்கப்படும் என்றும் அதன் நிர்வாகம் கூறியுள்ளது.

பிரபலமான குடும்ப இலக்கான குளோபல் வில்லேஜ் சீசன் 28 இல், உலகெங்கிலும் உள்ள 90 கலாச்சாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 27 பெவிலியன்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக, 3,500 க்கும் மேற்பட்ட ஷாப்பிங் அவுட்லெட்டுகள் மற்றும் 250 க்கும் மேற்பட்ட உணவு விருப்பங்கள் என இது பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவங்களை உறுதியளிக்கிறது.

இவற்றுடன் 400க்கும் மேற்பட்ட  கலைஞர்கள் நடத்தும் 200 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் இங்கே கண்டுகளிக்கலாம். கூடவே, கார்னவல் ஃபன்ஃபேரில் (Carnaval funfair) 195 ரைடுகளையைம் அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!