அமீரக செய்திகள்

UAE: படகு மூழ்கி கடலில் காணாமல் போன ஆசிய நபர்கள்!! விரைந்து செயல்பட்டு பத்திரமாக மீட்ட மீட்புக் குழுவினர்….

ஐக்கிய அரபு அமீரகத்தில் படகில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தால் தொலைந்து போன இரண்டு ஆசிய நபர்களை அவசர கால மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இது குறித்து வெளியான தகவல்களின் படி, 30 வயதுடைய ஆசிய நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், கடலில் படகில் பயணம் செய்து கொண்டிருந்த போது நிலையற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் படகு மூழ்கியுள்ளது. இதனால் இருவரும் கடலில் காணாமல் போயுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தேசிய பாதுகாப்பு மற்றும் கடலோர காவல்படை குழு/3வது படைப்பிரிவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு மையம், உள்துறை அமைச்சகத்தின் விமானப் பிரிவின் ஒருங்கிணைப்புடன், இரண்டு நபர்களையும் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டன.

கடல் பகுதியில் மோசமான சூழ்நிலை இருந்தபோதிலும், மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டதால், இருவரும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டனர். உள்துறை அமைச்சகத்தின் விமானம் மூலம் வெளியேற்றப்பட்ட இருவரும் கடுமையான சோர்வினால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவசர சிகிச்சைக்காக ஷார்ஜாவில் உள்ள அல் காசிமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!