அமீரக செய்திகள்

அமீரகத்தில் புதிதாக 23,500 வேலை வாய்ப்புகள்.. இனி இந்த துறை தான் உச்சத்தில் இருக்கும் எனவும் தகவல்..!!

வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிடுபவர்கள் தேர்ந்தெடுக்கும் முதன்மையான நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் அமீரகத்தில் இயங்கி வருவதால், குறிப்பிட்ட துறைகள் மட்டுமின்றி அனைத்து துறையிலும் அதிக வேலைவாயப்புகளை அமீரகம் வழங்கி வருகிறது.

இதனிடையில், வரவிருக்கும் ஆண்டுகளில் அமீரகம் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் அதிகளவிலான வேலைவாயப்புகளை கொண்டிருக்கும் துறையாக பயணம் மற்றும் சுற்றுலாத் துறை (Travel and Tourism Secror) உருவெடுக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமீரகத்தை பொருத்தவரை இந்த ஆண்டு புதிதாக 23,500 வேலைகள் பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமீரகத்தின் பொருளாதாரத்தில் இந்த துறையின் பங்களிப்பு தொடர்ந்து வளரும் என்றும், இது 2024 ஆம் ஆண்டில் மொத்த வேலைவாய்ப்பின் எண்ணிக்கையை 833,000 ஆக உயர்த்தும் என்றும் உலக பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சிலின் (WTTC) தலைவர் மற்றும் CEO ஜூலியா சிம்ப்சன் கூறியுள்ளார்.

அத்துடன், நடப்பு ஆண்டில் இந்த துறையின் பங்களிப்பு அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இது உள்நாட்டு வருமானத்தில் 236 பில்லியன் திர்ஹம்கள் எனும் மிகப்பெரிய எண்ணிக்கையை எட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2034 ஆம் ஆண்டிற்குள் அமீரகத்தின் பயண மற்றும் சுற்றுலாத் துறையில் 928,000 பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறிய சிம்ப்சன், நாட்டில் சராசரியாக 9 குடியிருப்பாளர்களில் ஒருவர் இத்துறையில் பணியாற்றுவார்கள் என்றும் சிம்ப்சன் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, 2024 மற்றும் 2034 க்கு இடையில் சுமார் 95,000 புதிய வேலைகள் பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் உருவாக்கப்பட இருப்பதாகவும், அமீரகப் பொருளாதாரத்தில் இந்தத் துறையின் பங்களிப்பு இந்த ஆண்டிற்குள் 275 பில்லியன் திர்ஹம்சாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

இதனிடையில், கடந்த 2023 ஆம் ஆண்டில் அமீரகத்தின் பயண மற்றும் சுற்றுலாத் துறையில் 41,000 வேலைகள் அதிகரித்து மொத்த எண்ணிக்கை தற்போது 809,000ஐ எட்டியுள்ளது. இது நாட்டில் ஒன்பது வேலைகளில் ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை மத்திய கிழக்கு நாடுகளைப் பொருத்தவரை, கடந்த 2023ம் ஆண்டில் 25 சதவீதத்திற்கும் மேலாக பயணம் மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சியடைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 460 பில்லியன் டாலர்களை எட்டியதாகவும், வேலைவாய்ப்புகள் கிட்டத்தட்ட 7.75 மில்லியனை எட்டியதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!