ADVERTISEMENT

UAE: ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்காத முதலாளிகளுக்கு எதிராக ஏழு புதிய அபாரதங்கள்.. புதிய ஆணையை வெளியிட்ட MOHRE..!!

Published: 28 Feb 2022, 1:37 PM |
Updated: 6 Mar 2022, 6:51 PM |
Posted By: admin

அமீரகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியத்தை செலுத்தத் தவறும் முதலாளிகளுக்கு எதிராக ஒரு புதிய ஆணையை மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

50 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் மனித வள அமைச்சகத்தின் கள ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது, ஊதியம் வழங்கும் தேதியிலிருந்து 17 நாட்களுக்குப் பிறகும் ஊதியம் வழங்கப்படாவிட்டால் எச்சரிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவது மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு பணி அனுமதி வழங்குவதை நிறுத்துவது போன்ற ஏழு விதமான புதிய அபராதங்களை இந்த புதிய ஆணையின் கீழ் அமைச்சகம் அறிவித்துள்ளது.

மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தின் புதிய ஆணையின்படி அறிமுகப்படுத்தப்பட்ட ஏழு அபராதங்கள் பற்றிய விபரங்களை இங்கே நாமும் தெரிந்துகொள்வோம்.

ADVERTISEMENT

அதிகாரப்பூர்வ நினைவூட்டல்களை வழங்குதல்: தொழிலாளர்களுக்கு பணி அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த நாளில் ஊதியம் வழங்காமல் முதலாளிகள் தாமதப்படுத்தினால், ஊதியம் வழங்கும் தேதியிலிருந்து (உதாரணமாக அடுத்த மாதத்தின் முதல் நாள்) மூன்றாவது மற்றும் பத்தாவது நாளுக்குப் பிறகு ஊதியம் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ நினைவூட்டல்களை நிறுவனங்கள் பெறும்.

– புதிய பணி அனுமதி வழங்குவதை நிறுத்துதல்: ஊதியம் வழங்கும் தேதியிலிருந்து 17வது நாளுக்குப் பிறகும் ஊதியம் வழங்குவதை தாமதப்படுத்தும் சந்தர்ப்பங்களில், 50 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் அமைச்சகத்தின் ஆய்வுகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.

ADVERTISEMENT

– பொது வழக்கறிஞருக்கு அறிவிப்பு: ஊதியம் வழங்கும் குறித்த தேதியிலிருந்து 30 நாட்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கத் தவறிய முதலாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, அரசு வழக்கறிஞருக்கு அறிவிப்பு வெளியிடப்படும். இந்த நடவடிக்கைகள் 50 முதல் 499 தொழிலாளர்கள் அல்லது 500 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு எதிராகத் தொடங்கப்படும். இல்லையெனில் MOHRE ஆல் அதிக ஆபத்துள்ள நிறுவனங்களின் பட்டியலில் இந்த நிறுவனங்கள் வகைப்படுத்தப்படும்.

– விதி மீறல் செய்த உரிமையாளரின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கான பணி அனுமதிகளை இடைநிறுத்துதல்: ஊதியம் வழங்கும் நாளிலிருந்து இரண்டு மாதங்கள் ஆகியும் ஊதியம் வழங்காத அனைத்து நிறுவனங்களுக்கும் புதிய பணி அனுமதிகளை வழங்குவது நிறுத்தப்படும்.

– மீண்டும் மீண்டும் விதிமீறலில் ஈடுபடும் நிறுவனத்தின் தரத்தை குறைத்தல்: ஒரு நிறுவனம் ஏதேனும் விதி மீறல்களை மீண்டும் செய்தால் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மீறல்களில் ஈடுபட்டிருந்தால், அந்த நிறுவனங்கள் அமைச்சகத்தின் ஆய்வுகளுக்கு உட்பட்டு, அந்த நிறுவனத்தின் தரம் குறைக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும்.

– பணி அனுமதி புதுப்பித்தல் இடைநிறுத்தம்: தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஊதியம் வழங்காத நிறுவனங்களால் பணி அனுமதிகளை வழங்கவோ, அல்லது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் பனி அனுமதியை புதுப்பிக்கவோ முடியாது.

– பொது வழக்கு மற்றும் அபராதங்களுக்கு பரிந்துரை: ஊதியம் வழங்கும் நாளிலிருந்து தொடர்ந்து ஆறு மாதங்கள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பொது வழக்குக்கு பரிந்துரைக்கப்படும் மற்றும் கடும் அபராதம் விதிக்கப்படும்.