விசா இல்லாமல் இந்தியா உட்பட 103 நாட்டு குடிமக்கள் ஓமான் வருகை புரிய அனுமதி..!! நிபந்தனைகளை வெளியிட்ட ROP.!!
ஓமான் அரசானது தனது நாட்டின் சுற்றுலா இயக்கத்திற்கு ஆதரவாகவும், ஓமானுக்கு வருகை தர விரும்பும் பயணிகளுக்கு வசதியாகவும், 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் ஓமானிற்கு வருகை புரிய அனுமதி வழங்கப்படும் என சமீபத்தில் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து, 103 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 10 நாட்களுக்கு நுழைவு விசாவிலிருந்து (entry visa) விலக்கு அளிக்கப்படும் என்று ராயல் ஓமான் காவல்துறை தற்பொழுது அறிவித்துள்ளது.
தற்பொழுது வரை GCC நாட்டவர்களுக்கு மட்டுமே விசா இல்லாமல் ஓமானில் நுழைய அந்நாட்டு அரசு அனுமதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது விலக்கு அளிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து ஓமானுக்கு வருகை தர விரும்பும் நபர்கள் ஓமானில் நுழைவதற்கு ஏற்கெனவே எடுக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட ஹோட்டல் முன்பதிவு, சுகாதார காப்பீடு மற்றும் ரிட்டர்ன் டிக்கெட் உள்ளிட்டவை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் இவை ஓமான் நுழைவதற்கு நிபந்தனைகளாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது ஓமானுக்கு வருகை தரவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், தேசிய பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பை உயர்த்தவும் அதிக சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த 103 நாடுகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விசா இல்லாமல் 10 நாட்கள் வருகை புரிய அனுமதிக்கப்பட்டுள்ள நாடுகள்
- இந்தியா
- போர்ச்சுக்கல்
- ஸ்வீடன்
- நார்வே
- இத்தாலி
- அண்டோரா
- லாட்வியா
- பல்கேரியா
- சான் மரினோ
- சுவிட்சர்லாந்து
- கிரொட்டியா
- லிக்டென்ஸ்டைன்
- மாசிடோனியா
- ஹங்கேரி
- செர்பியா
- ஜார்ஜியா
- எஸ்டோனியா
- டென்மார்க்
- ஜெர்மனி
- கிரீஸ்
- ஐஸ்லேண்ட்
- பெல்ஜியம்
- ரோமானியா
- ஸ்லோவேனியா
- பின்லாந்து
- லக்ஸம்போர்க்
- மால்டா
- மொனாகோ
- சிப்ரஸ்
- உக்ரைன்
- ஸ்பெயின்
- Czech ரீபப்லிக்
- வாடிகன்
- ஆஸ்திரியா
- அயர்லாந்து
- பிரிட்டன்
- போலந்து
- ஸ்லோவாகியா
- பிரான்ஸ்
- லிதுவேனியா
- மால்டோவா
- நெதர்லாண்ட்ஸ்
- எக்குவடோர்
- பொலிவியா
- வெனிசுலா
- கொலம்பியா
- உருகுவே
- பராகுவே
- சுரினாம்
- அர்ஜென்டினா
- பிரேசில்
- சிலி
- ஜப்பான்
- தாய்லாந்து
- சவுத் ஆப்பிரிக்கா
- லெபனான்
- ஹாங் காங்
- ரஷ்யா
- சீனா
- செய்செல்லெஸ்
- அமெரிக்கா
- புருனே தாருஸ்ஸலாம்
- துருக்கி
- சவுத் கொரியா
- நியூஸிலாந்து
- ஈரான்
- கானா
- ஆஸ்திரேலியா
- இந்தோனேஷியா
- தைவான்
- கனடா
- மலேஷியா
- மக்காவு ஐஸ்லாந்து
- சிங்கப்பூர்
- அஜர்பைஜான்
- உஸ்பேகிஸ்தான்
- பெலாரஸ்
- தஜிகிஸ்தான்
- கிர்கிஸ்தான்
- கோஸ்டா ரிக்கா
- நிகரகுவா
- மொரோக்கோ
- அர்மேனியா
- பனாமா
- போஸ்னியா & ஹெர்ஸேகோவினா
- துர்க்மெனிஸ்தான்
- ஹோண்டுராஸ்
- குவாத்தமாலா
- கஜகஸ்தான்
- லாவோஸ்
- அல்பேனியா
- பூட்டான்
- பெரு
- மாலத்தீவுகள்
- சால்வடார்
- வியட்நாம்
- கியூபா
- மெக்ஸிகோ
- ஜோர்டான்
- எகிப்து
- துனிசியா
- அல்ஜீரியா
- மாரிடேனியா