அமீரக செய்திகள்

அமீரகம் அறிவித்த 5 வருட “மல்டிபிள் என்ட்ரி டூரிஸ்ட் விசா” க்கு விண்ணப்பிப்பது எப்படி..?? ஸ்பான்சர் தேவையா..??

ஐக்கிய அரபு அமீரக அரசால் அறிவிக்கப்பட்ட ஐந்து வருட மல்டிபிள் என்ட்ரி டூரிஸ்ட் விசாவிற்கு அணைத்து நாட்டினரும் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) அதன் இணையதளம் மூலம் அறிவித்துள்ளது.

அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்களில் பகிரப்பட்டுள்ள ஒரு பதிவில், வெளிநாட்டினர் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பூர்த்தி செய்ய வேண்டிய வழிமுறைகளை ஒவ்வொன்றாக விளக்கியுள்ளது. அதுபற்றி கீழே காணலாம்.

படி 1: www.ica.gov.ae என்ற ICA இணையதளம் செல்ல வேண்டும்.

படி 2: ICA இணையதளத்தில் உள்ள ‘இ-சேனல் சேவைகள் (E-channel Services)’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

படி 3: பின்னர் அதில் ‘பொதுச் சேவைகள் (Public services)’ என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

படி 4: பொது சேவைகள் பட்டியலில் இருக்கும் ‘அனைத்து நாட்டினருக்குமான மல்டி டிரிப் / டூரிஸ்ட் நீண்ட கால விசா (5 வருடங்கள்) / விசா வழங்குதல்’ என்ற சேவையைத் தேர்ந்தெடுக்கவும். (Visa – multi-trip / tourist long-term (5 years) for all nationalities / visa issuance)

படி 5: அதன் பின்பு அந்த சேவையில் கேட்கப்படும் விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பாஸ்போர்ட் விவரங்களுடன் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.

படி 6: விண்ணப்பதாரரின் விவரங்கள் அனைத்தும் நிரப்பப்பட்ட பிறகு, அவரின் பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.

படி 7: விண்ணப்பம் முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட பிறகு மீண்டும் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்யவும்.

படி 8: இறுதியாக மல்டி டிரிப் / டூரிஸ்ட் நீண்ட கால விசாவிற்கான கட்டணங்களுக்கு பணம் செலுத்த வேண்டும்.

ஐந்து வருட மல்டிபிள் என்ட்ரி சுற்றுலா விசா..!

அனைத்து நாட்டினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து வருட மல்டிபிள் என்ட்ரி சுற்றுலா விசா எனும் இந்த புதிய விசாவானது, கடந்த மார்ச் 21, 2021 அன்று ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

விசாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்ந்த ஸ்பான்சர் தேவையா..?

விசா அறிவிக்கப்பட்ட போது வழங்கப்பட்ட விவரங்களின்படி, இந்த விசா வழங்குவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தை சார்ந்த தனிநபர் அல்லது வேறு ஏதேனும் ஸ்பான்சர் தேவையில்லை. சுற்றுலா பயணிகள் தங்களின் சுய-ஸ்பான்சர்ஷிப்பில் இந்த நீண்ட கால டூரிஸ்ட் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த விசாவில் அமீரகம் வந்து தங்குவதற்கான அதிகபட்ச காலம் என்ன..?

அமைச்சரவை வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, இந்த விசாவை வைத்திருக்கும் சுற்றுலா பயணி, அமீரகம் வரும் ஒவ்வொரு முறையும் 90 நாட்கள் அமீரகத்தில் தொடர்ந்து தங்கலாம். மேலும் விருப்பப்பட்டால் இந்த விசாவினை மேலும் 90 நாட்களுக்கு நீட்டித்து கொள்ளலாம்.

இதற்கு முன்னர் வரையிலும் நடைமுறையில் இருந்த இரு வகையான சுற்றுலா விசாவில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 30 நாள் அல்லது அதிகபட்சம் 90 நாள் காலத்திற்கு மட்டுமே விசா பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!