அமீரக செய்திகள்

அபுதாபியில் சுற்றுலாத்தலங்களை பார்வையிட இலவச பேருந்து வசதி அறிமுகம்..!!

அபுதாபியின் முக்கிய ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல இலவச பேருந்து சேவையை அதிகாரிகள் தற்பொழுது தொடங்கியுள்ளனர்.

அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DCT) அறிமுகப்படுத்தியுள்ள புதிய ‘விசிட் அபுதாபி ஷட்டில் பஸ் (visit abudhabi shuttle bus)’ சேவையானது இரண்டு முக்கிய வழித்தடங்களில் 18 நிறுத்தங்களை கொண்டுள்ளது.

இது அபுதாபியில் ஒன்பது ஹோட்டல்கள், ஒன்பது ஓய்வு நேர இடங்கள் மற்றும் இரண்டு எக்ஸ்போ 2020 பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இதன் முதல் கட்டம் யாஸ் ஐலேண்ட், ஜுபைல் ஐலேண்ட், சாதியத் ஐலேண்ட், அபுதாபி சிட்டி சென்டர் மற்றும் கிராண்ட் கேனல் ஆகியவற்றை இணைக்கும் வழிகளைக் காணும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சேவைக்கு 11 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விசிட் அபுதாபி ஆன்லைன் முன்பதிவு தளத்தைப் பயன்படுத்தி, ஹோட்டலில் தங்குவதற்கு அல்லது அபுதாபியின் ஏதேனும் சுற்றுலாதலம் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகளை வாங்கியவுடன், குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் இந்த பேருந்திற்கான இலவச அணுகலைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்தவுடன், அவர்கள் QR குறியீட்டைக் கொண்ட வவுச்சரைப் பெறுவார்கள் எனவும் இது ஷட்டில் பஸ் ஆன்லைன் பிளாட்ஃபார்மை அணுகி, தங்கள் விவரங்களைப் பதிவு செய்து, அருகிலுள்ள ஷட்டில் பஸ் நிலையத்தை தெரிந்து கொள்ளவும் மற்றும் பேருந்துகளைக் கண்காணிக்கவும் அனுமதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DCT-யின் சுற்றுலா மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாக இயக்குனர் அலி ஹசன் அல் ஷைபா, இந்தச் சேவையானது சுற்றுலாத் தலங்களுக்கு வருகையை அதிகரிக்கும் மற்றும் இந்த நிறுவனங்களின் செயல்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!