அமீரக செய்திகள்

மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் திறப்பையொட்டி துபாய் முழுவதும் ஜெட்பேக்கில் பறந்து சென்று அழைப்பு விடுத்த ரியல் லைஃப் அயர்ன் மேன்..!!

துபாயில் நவீன முறையில் கட்டப்பட்டு நாளை, பிப்ரவரி 22 ம் தேதி திறக்கப்படவுள்ள உலகின் மிக அழகான அருங்காட்சியகங்களில் ஒன்றான மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சரின் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்களை வழங்குவதற்காக ஜெட்பேக்கில் ஒருவர் துபாய் முழுவதும் பறந்து சென்ற வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது.

பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளரான ரிச்சர்ட் பிரவுனிங் இந்த அழைப்புகளை வழங்குவதற்காக துபாய் முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களுக்கு பறந்து சென்றுள்ளார்.

‘ரியல் லைஃப் அயர்ன் மேன்’ என்று அழைக்கப்படும் இந்த நபர், 77 மீட்டர் அளவுள்ள கட்டிடத்தின் உச்சிக்கு லிஃப்டில் பயணம் செய்வதற்கு முன்பு அருங்காட்சியகத்தின் உள்ளே இருந்து தயாராகுவதை வீடியோ காட்டுகிறது.

பின் பிரவுனிங் புறப்படுவதற்கு முன், கட்டமைப்பின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு மேடையில் ஏறுகிறார். அவரது முதல் இலக்காக டவுன்டவுன் துபாயை சென்றடைந்து புர்ஜ் கலீஃபாவின் அருகில் பார்வையாளர்களுக்கு சில அழைப்பிதழ்களை விநியோகிக்க கீழே இறங்குகிறார்.

அவர் மீண்டும் புறப்பட்டு, துபாய் ஃபவுண்டைன் மேல் பறந்து, பின்னர் அவர் துபாய் மெரினாவைக் கடந்து சென்று அய்ன் துபாய்க்கு முன்னால் தரையிறங்கியதுடன் வீடியோ முடிவடைகிறது.

பிப்ரவரி 22 அன்று திறப்பு விழாவிற்குப் பிறகு, பிப்ரவரி 23 முதல் அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு அனுமதியை வழங்குகிறது. இதற்கான நுழைவுக் கட்டணம் 145 திர்ஹம் ஆகும். குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எமிராட்டி மூத்த குடிமக்கள் இலவசமாக நுழையவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் ‘பூமியின் மிக அழகான கட்டிடம்’ என்று அழைக்கப்படும் இந்த கட்டிடம் கட்டிடக்கலை, கையெழுத்து, ரோபாட்டிக்ஸ், தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.

 

வளைந்த கட்டமைப்பின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் ஜன்னல்கள் ஆகும். இதில் அவாண்ட்-கார்ட் எஃகு (avant-garde steel) முழுவதும் அரேபிய கையெழுத்து வடிவில் நுணுக்கமாக செதுக்கப்பட்ட ஷேக் முகமதுவின் வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளது. ஏழு மாடிக் கட்டமைப்பிற்குள் அமைக்கப்பட்டிருக்கும் ஜன்னல்கள் இயற்கை ஒளியை அனுமதிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!