அமீரக செய்திகள்

அமீரகத்தில் விற்பனைக்கு வந்த iPhone 14 மாடல்கள்.. கடை திறந்த 45 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த iPhone 14 Pro, iPhone 14 ProMax..

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 16 ம் தேதி முதல் புதிய மாடலான iPhone 14 வகை மொபைல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் துபாய் மால் ஆப்பிள் ஸ்டோரில் உள்ள அனைத்து iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max மொபைல்களும் விற்பனை தொடங்கிய 45 நிமிடங்களிலே முன்பதிவு செய்யப்பட்டு மற்றும் விற்கப்பட்டுள்ளன என தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விற்பனைக்கு வந்த புத்தம் புதிய ஐபோன் 14 ஐப் பெற நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்றதாகவும் இதனால் கடைக்கு வெளியேயும் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் காலை 8 மணி முதலே நுழைவாயிலில் வரிசையாக நின்ற வாடிக்கையாளர்களை வரவேற்று விற்பனையை தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள iPhone 14 இன் விலை 3,399 திர்ஹம் என்றும், iPhone 14 Plus 3,799 திர்ஹம் என்றும், iPhone 14 Pro 4,299 திர்ஹம் என்றும் iPhone 14 ProMax இன் விலை 4,699 திர்ஹம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 7 அன்று வெளியிடப்பட்ட இந்த புதிய   ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்ட முதல் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!