அமீரக செய்திகள்

துபாய்: முக்கிய சாலைகளில் இன்று கால தாமதம் ஏற்படும்..!! மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு RTA அறிவுறுத்தல்…!!

துபாயின் சில முக்கிய சாலைகளில் இன்று (பிப்.23) சைக்கிள் பந்தயம் நடைபெற உள்ளதால், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சைக்கிள் ஈவன்ட் காரணமாக துபாயின் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.  கடந்தபிப்ரவரி 20 அன்று தொடங்கப்பட்ட UAE Tour 2023, சைக்கிள் பந்தயமானது இன்று துபாயை அடைய உள்ளது.

மேலும், சைக்கிள் டூர் துபாய் முதல் நிலையில் ஷிண்டாகாவிலிருந்து புறப்பட்டு, பின்னர் அல் குத்ரா சைக்கிள் டிராக் மற்றும் எக்ஸ்போ சிட்டி துபாய் போன்ற முக்கியமான நிறுத்தங்களைத் தொட்டுச் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், சைக்கிள் ஓட்டுபவர்கள் பாம் மற்றும் துபாய் ஹார்பர் தளத்திற்கு செல்வதற்கு முன்னதாக, கிரசண்ட் ரோட்டில் உள்ள பாம் ஜுமேராவை சென்றடைவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, சைக்கிள் டூருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, இன்று (பிப்ரவரி 23) மதியம் 12.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை துபாயில் பின்வரும் முக்கிய சாலைகளை குடியிருப்பாளர்கள் மனதில் கொண்டு மாற்று வழிகளில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், சைக்கிள் சுற்றுப்பயணம் நடைபெறும் சாலைகளில் போக்குவரத்துத் தாமதம் ஏற்படும் என்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் அதற்கேற்றவாறு பயணத்தை திட்டமிடுமாரும் RTA வலியுறுத்தியுள்ளது.

சைக்கிள்கள் சாலைகளில் செல்லும்போது, வாகன ஓட்டிகளுக்கு பாதைகள் தற்காலிகமாக மூடப்படும் என்பதால், சாலைகளின் பட்டியலை ஆணையம் வெளியிட்டுள்ளது.

  • அல் ஷிந்தகா
  • இன்ஃபினிட்டி பிரிட்ஜ்
  • அல் கலீஜ் ஸ்ட்ரீட்
  • ஷேக் ரஷீத் ரோடு
  • ஆட் மேத்தா ஸ்ட்ரீட்
  • அல் அசயல் ஸ்ட்ரீட்
  • அல் மராபியா ஸ்ட்ரீட்
  • துபாய் ஹில்ஸ்
  • உம் சுகீம் ஸ்ட்ரீட்
  • அல் குத்ரா ஸ்ட்ரீட்
  • சாய் அல் சலாம் ஸ்ட்ரீட்
  •  லேபாப் ரோட்
  • எக்ஸ்போ ரோடு.
  • எக்ஸ்போ சிட்டி துபாய்
  • ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட்
  • அல் யாலாயிஸ் ஸ்ட்ரீட்
  • அல் கமிலா ஸ்ட்ரீட்
  • ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்
  • பாம் ஜுமேரா
  • கிங் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் ஸ்ட்ரீட்
  • துபாய் ஹார்பர்

மேலே பட்டியலிடப்பட்டுள்ள சாலைகள் வழியாக சைக்கிள் ஓட்டுநர்கள் கடந்து செல்லும் போது குறிப்பிட்ட சந்திப்புகளில் 10 முதல் 15 நிமிடங்கள் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று RTA தெரிவித்துள்ளது. அதேவேளை, கடைசி போட்டியாளர் கடந்து சென்றதும், சாதாரண போக்குவரத்து ஓட்டம் மீண்டும் தொடங்கும் என்றும் கூறியுள்ளது.

மேலும், பிப்ரவரி 20 தொடங்கி 26 வரை நடைபெறும் சுற்றுப்பயணமானது, ஏழு நிலைகளில், பதினாறு UCI வேர்ல்ட் டீம்கள் நான்கு UCI ப்ரோடீம்களுடன் இணைக்கப்படும், அத்துடன் மத்திய கிழக்கின் தனித்துவமான சாலைகளில் அபுதாபியில் தொடங்கி முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!