நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி- இந்தியா தோல்வி

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. வெலிங்டனில் கடந்த 21 ம் தேதி நடைபெற்ற இந்தியா, நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 165 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 348 ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தாலும் 183 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சரியாக விளையாடவில்லை. மயங்க் அகர்வால் அரை சதம் அடித்து ஆறுதல் அளித்தார். மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்து 39 ரன்கள் பின்தங்கியிருந்தது. இன்று 4ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்து நியூசிலாந்து வீரர்கள் அசத்தினர். இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின் களமிறங்கிய நியூசிலாந்து 1.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம், 2 போட்டிகள் உள்ள டெஸ்ட் தொடரில் 1-0 என அந்த அணி முன்னிலை பெற்றது.
மொத்தம் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டிம் சோதீ ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி வரும் 29ஆம் தேதி ஹக்லே ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.