IPL2020: துபாய் வந்திறங்கிய “சென்னை சூப்பர் கிங்ஸ்” அணி..!! தோனியை காண ஆவலுடன் ரசிகர்கள்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் செப்டம்பர் 19 முதல் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL2020) கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று துபாய் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், CSK அணியின் தற்போதைய கேப்டனும், தமிழக ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்று அழைக்கப்படும் MS தோனி, மற்றும் CSK அணியின் துணை கேப்டனும், ரசிகர்களால் ‘சின்ன தல’ என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததற்கு பிறகு IPL போட்டிகளில் விளையாட இருப்பதால், அவர்களை மைதானத்தில் காண கிரிக்கெட் ரசிகர்கள் குறிப்பாக தமிழ்நாட்டு ரசிகர்கள் பெரும் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில், IPL போட்டிகளில் பங்கேற்கவுள்ள CSK அணி வீரர்கள் அனைவரும் சென்னையிலிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மஞ்சள் நிற CSK ஜெர்சியுடன் துபாய் விமான நிலையம் வந்தடைந்துள்ளனர். இருப்பினும் சென்னை அணியின் மற்றொரு முக்கிய வீரரான ஹர்பஜன் சிங்க் மட்டும் தன் சொந்த காரணங்களுக்காக இன்று வரவில்லை. எனினும் சில நாட்கள் கழித்து அவர் சென்னை அணியுடன் இணைந்துவிடுவார் எனவும் CSK அணி நிர்வாகம் சார்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஅமீரகத்தில் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 வது தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 10 ஆம் தேதி வரையிலும் தொடரும் என்பதும், மேலும் இப்போட்டிகள் அனைத்தும் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.