தேனி வனப்பகுதியில் பற்றி எறியும் காட்டுத்தீ!!

தேனி மாவட்டத்தில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிகின்றது.
கோடைக்காலம் ஆரம்பிக்கும் நிலையில், தேனி மாவட்டம் போடிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிகளில் தீ பற்றி எரிகிறது. இதனைச்சுற்றியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையானது எண்ணற்ற அறிய வகை மரங்களையும் வன விலங்குகளையும் கொண்டது.
தற்பொழுது ஏற்பட்ட காட்டுத்தீயால் பல வகை மரங்கள் அழிந்து வருகின்றன. மேலும் வன உயிரினங்களும் பாதிப்படைந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
தேனியில் உருவாகியுள்ள காட்டுத்தீயால் இயற்கை வளம் அழிந்து அங்குள்ள மக்களின் மனதில் பயத்தை உருவாக்கி வருகின்றது.கூடுதலாக, அந்த பகுதியில் பலன் தரக்கூடிய எலுமிச்சை, இலவம் மற்றும் இது போன்ற சில மரங்கள் அழிந்து வருவதால் அங்குள்ள மக்கள், காட்டுத்தீயை விரைவில் இணைக்குமாறு வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரைவில் காட்டுத்தீ அணைக்கப்பட்டு அங்குள்ள இயற்கை வளம் காப்பாற்றப்படும் என எதிர்பார்ப்போம்.