இந்தியாவில் இருந்து கத்தார் செல்ல டிக்கெட் புக்கிங் தொடக்கம்..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!

இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய அரசானது குறிப்பிட்ட சில நாடுகளுடன் “Air Bubble” என்ற ஒப்பந்தப்படி, இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் இந்தியா மற்றும் கத்தார் இடையே போடப்பட்ட இந்த ஒப்பந்தப்படி, ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான நாட்களில் சிறப்பு விமான சேவைகளை இரு நாடுகளுக்கும் சொந்தமான விமான நிறுவனங்களின் விமானங்கள் மூலம் இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது சமூக ஊடக பக்கத்தில் ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 31 ம் தேதி வரையிலான நாட்களின் இந்தியாவில் இருந்து கத்தாருக்கு செல்ல வேண்டிய விமானங்களுக்கான முன்பதிவினை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
கத்தார் நாட்டிற்கு வெளியே இருக்கும் குடியிருப்பாளர்களில், குடியிருப்பு விசா கலவாதியானவர்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு மேல் நாட்டிற்கு வெளியே தங்கியிருப்பவர்கள் தங்களின் காலாவதியாகியிருக்கும் குடியிருப்பு அனுமதியை புதுப்பிப்பதற்கான கட்டணங்களிலிருந்து விலக்கு பெறுவதற்கு https://portal.www.gov.qa என்ற லிங்கில் சென்று விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும் கத்தார் நாட்டு உள்துறை அமைச்சகம் (MoI) ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.