துபாயிலிருந்து கோழிக்கோடு சென்ற விமானம் விபத்து.. மீட்புப்பணிகள் தீவிரம்..!!
வந்தே பாரத்தின் திருப்பி அனுப்பும் நடவடிக்கை மூலம் அமீரத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் சிறப்பு விமானங்களில் இன்று துபாயில் இருந்து 191 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 07) மாலை கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி சென்றதில் பெரிய விபத்து நடந்தேறியுள்ளது.
இந்த விபத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரு துண்டுகளாக உடைந்துள்ளதாகவும், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கப்படுகிறது. இரவு 7.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோழிக்கோடு பகுதியில் தற்போது அதிக மழை பெய்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Air India Express flight from Dubai skids off runway and crashes in Kozhikode#airindiaexpress #crashed #dubai #Kozhikode #khaleejtamil pic.twitter.com/mpH29kjRpm
— Khaleej Tamil (@khaleej_tamil) August 7, 2020
துபாயிலிருந்து கோழிக்கோடு சென்ற விமானம் விபத்து.. மீட்புப்பணிகள் தீவிரம்..!!#Dubai #kozhikode #airindiaexpress #crashed #VBM #khaleejtamil pic.twitter.com/Qm1Z6SSngp
— Khaleej Tamil (@khaleej_tamil) August 7, 2020