அமீரக செய்திகள்

UAE: சாலையின் நடுவே சுற்றித் திரியும் மான்கள்..!! சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ..!! பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த அதிகாரிகள்..!!

அபுதாபியின் சாதியாத் ஐலேண்டானது (Saadiyat Island) Gazelle எனும் ஒரு வித வகை மான் உட்பட சில குறிப்பிட்ட வனவிலங்குகளின் தாயகமாகும். இந்த அற்புதமான உயிரினங்கள் நீண்ட காலமாக அப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன.

இருப்பினும், இந்த விலங்குகள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறி சாலைகளிலும் தெருக்களிலும் சுதந்திரமாக நடமாடுவது போன்ற சில வீடியோக்கள் சமீபத்தில் பகிரப்பட்டுள்ளன. இது அந்த விலங்குகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இதை கவனத்தில் கொண்டு, அபுதாபி சுற்றுச்சூழல் ஆணையம் (EAD) இந்த  விலங்குகளை பாதுகாப்பான மற்றும் பொருத்தமான வாழ்விடங்களுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு தற்போது விலங்குகளை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என தகவல் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், அதுவரையிலும் இந்த வகை மான்களைக் கண்டால் கவனமாக இருக்குமாறும், அவர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த விலங்குகளை யாரேனும் கண்டால், 800 555 என்ற இலவச எண்ணுக்குத் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!