துபாய்: தடுப்பூசி மையங்கள் செல்லும் விசிட்டர்களுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்த RTA..!!
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) கோவிட் -19 தடுப்பூசி மையங்களுக்கு அருகில் இலவச வாகன பார்க்கிங்கை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு தடுப்பூசி மையத்திற்கும் அருகே சுமார் 50 பார்க்கிங் இடங்கள் இலவசமாக கிடைக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
நியமிக்கப்பட்ட பார்க்கிங் இடங்கள் ஹோர் அல் அன்ஸ், அல் பார்ஷா மற்றும் அல் குசைஸ் சுகாதார நிலையங்கள் மற்றும் கிராண்ட் ஹையாத் ஹோட்டல் கூடாரத்திற்கு அருகில் தடுப்பூசி மையங்கள் செயல்படும் நேரங்களில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
RTA மேலும் தெரிவிக்கையில், தகுதிவாய்ந்த துபாய் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வரை இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த இலவச பார்க்கிங்கிற்காக நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் அடையாள பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போட ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக RTA தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.