அமீரக செய்திகள்

அமீரகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்..!! கடந்த ஒரு நாளில் சுமார் 3,000 பேருக்கு கொரோனா தொற்று..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை, ஜனவரி 9, 2021) புதிதாக 2,998 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 227,702 ஆக உயர்ந்துள்ளது.

அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 2,264 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 203,660 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!