அமீரக செய்திகள்

UAE: 430 இடங்களில் லைவ் ஸ்ட்ரீமிங்.. பிரம்மாண்ட வானவேடிக்கை.. நாளை முதல் தொடங்கும் ‘எக்ஸ்போ 2020 துபாய்’..!!

உலகின் மிகப்பெரிய கண்காட்சியான எக்ஸ்போ 2020 துபாயின் நட்சத்திர தொடக்க விழா நாளை செப்டம்பர் 30 ம் தேதி மாலை துவங்கவுள்ள நிலையில், இந்த பிரம்மாண்ட நிகழ்வின் தொடக்க விழாவை பொதுமக்கள் தாங்கள் எந்த பகுதியில் இருந்தாலும் அங்கிருந்தே காண ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 430 க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து நேரலையாக ஸ்ட்ரீம் (Live Stream) செய்யப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் தொடங்கிய பின்னர் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் உலகின் மிகப்பெரிய நிகழ்வான இந்த எக்ஸ்போ 2020 யின் முதல் நாளைக் குறிக்கும் வகையில் மூன்று கண்கவர் வானவேடிக்கைகள் நடத்தப்படும் எனவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வின் தொடக்க விழாவை அனைவரும் கண்டு மகிழும் விதமாக விமான நிலையங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் முதல் ஹோட்டல்கள் மற்றும் பிற முக்கிய இடங்களில் திரைகள் அமைக்கப்படும் என்றும், உலகில் எங்கிருந்தும் பார்வையாளர்கள் virtualexpo.world என்ற வலைத்தளத்தில் உலகளாவிய நேரடி லைவ் ஸ்ட்ரீம் வழியாகவும் மற்றும் எக்ஸ்போ டிவி (EXPO TV) வழியாகவும் காணலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது தவிர மூன்று கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சியானது எக்ஸ்போ 2020 யின் முதல் நாளான அக்டோபர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு தொடங்கும். இந்த வானவேடிக்கை துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி (Dubai Festival City), துபாய் ஃபிரேம் (Dubai Frame) மற்றும் பாம் ஜுமைராவில் உள்ள தி பாயின்ட் (The Pointe) ஆகிய இடங்களில் அதன் தனித்துவமான ஸ்டைலில் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. அதிலும் குறிப்பாக தி பாயின்ட் மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி இரண்டும் எக்ஸ்போ 2020 தீமில் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சிகளை தங்களின் நீரூற்றின் மூலம் பார்வையாளர்களுக்கு வழங்கவுள்ளது. அதே நேரத்தில் துபாய் ஃபிரேம் எக்ஸ்போ வண்ணங்களால் ஒளிரூட்டப்படும்.

தொடக்க விழாவின் லைவ் ஸ்ட்ரீமிங் நாடு முழுவதும் 240 க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் காண்பிக்கப்படவுள்ளது. இதில் ரோவ், அர்மானி, அட்ரஸ் ஹோட்டல்கள் & ரிசார்ட்ஸ், மற்றும் விடா ஹோட்டல்கள் & ரிசார்ட்ஸ், அத்துடன் அக்கோர், மேரியட், ஹில்டன், இன்டெர்கன்டினென்டல் ஹோட்டல் குரூப், ரோட்டானா, ஜுமேரா, ஹயாட் இன்டர்நேஷனல் மற்றும் அட்லாண்டிஸ் தி பாம் ஆகிய ஹோட்டல்களிலும் திரையிடப்படவுள்ளது. (Emaar’s Rove, Armani, Address Hotels & Resorts, Vida Hotels & Resorts, Accor, Marriot, Hilton, IHG, Rotana, Jumeirah, Hyatt International and Atlantis The Palm)

கூடுதலாக, அமீரகத்தில் உள்ள 17 மஜித் அல் ஃபுட்டைம் மால்கள் (Majid Al Futtaim malls) சிட்டி வாக் (City Walk), நக்கீல் மால் (Nakheel Mall) மற்றும் இப்னு பட்டுடா மால் (Ibn Battuta Mall), அத்துடன் துபாய் மற்றும் அபுதாபி முழுவதும் உள்ள 50 ஜஷன்மால் (Jashanmal) இடங்கள், 97 மெடிக்ளினிக்ஸ் (Mediclinics), துபாய் மற்றும் அபுதாபி சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் ஜபீல் லேடிஸ் கிளப் (Zabeel Ladies Club) மற்றும் ஷரப் டிஜி (Sharaf DG) ஆகிய இடங்களிலும் லைவ் ஸ்ட்ரீமிங் திரையிடப்படவுள்ளது.

மேலும் உம் அல் குவைனின் பல்வேறு இடங்கள், அபுதாபியில் உள்ள யாஸ் பிளாசா மற்றும் ராஸ் அல் கைமாவில் உள்ள கார்னிச், அல் மர்ஜன் தீவு மற்றும் மனார் மால், அஜ்மான் ஹெரிடேஜ் வில்லேஜ் மற்றும் ஃபுஜைரா ஃபோர்ட் (Fujairah Fort) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடக்க விழா காட்சிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!