அமீரக செய்திகள்

UAE: வான வேடிக்கை, லைட் ஷோ, இசை நிகழ்ச்சி என களைகட்டவிருக்கும் அய்ன் துபாயின் துவக்க விழா..!!

உலகின் மிக உயரமான மற்றும் மிகப்பெரிய ஃபெர்ரி வீலான (ferry wheel) அய்ன் துபாய் (Ain Dubai) 2021 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் திறக்கப்பட உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அக்டோபர் 21 ம் தேதி திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவிருக்கும் இரண்டு நாள் துவக்க விழாவில் ஏராளமான பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படவிருக்கின்றன.

அய்ன் துபாயின் தொடக்க வாரத்தில் வருகை தரும் பார்வையாளர்கள் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான வீலில் பயணம் செய்வதோடு ஏராளமான சிறந்த அனுபவங்களைப் பெறலாம்.


அய்ன் துபாய் பிளாசா அக்டோபர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில், இரண்டு நாள் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, குடும்பத்தினருக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் முதல் வானவேடிக்கை வரை நிகழ்த்தவுள்ளது.

துவக்க விழாவில் அய்ன் துபாய் lounge பகுதியில் இருந்து மற்றும் கேபின்களுக்குள் உணவு கிடைக்கிறது. மேலும் அய்ன் ​​பிளாசாவில் 12 ஃபுட் ட்ரக்குகள் பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து டிஜே டேனி நெவிலின் இசைத் தொகுப்பு இரவு 8 மணிக்கு, மேடையில் நேரடியாகவும் ரைடர்ஸ் ரசிக்கும்படியாக அனைத்து காப்ஸ்யூல்களிலும் மியூசிக் ப்ரோஜெக்ட் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் இரவு 8.30 மணிக்கு ட்ரோன்கள் மற்றும் வானவேடிக்கைகளுடன் பல ஒளி நிகழ்ச்சிகள் (light show) நடத்தப்படவிருக்கின்றன.

துவக்க விழாவின் இரண்டாவது நாளான அக்டோபர் 22 அன்று, ஃப்ளாஷ் என்டர்டெயின்மென்ட் மற்றும் விர்ஜின் ரேடியோ துபாய் ரீஜியன் ஆர்டிஸ்ட் ஸ்பாட்லைட் இனிஷியேடிவ்வில் இருந்து இசை நிகழ்ச்சியானது பிற்பகல் 2 மணி முதல் மாலை வரை நிகழ்த்தப்படும். இரண்டாம் நாளில் பல  ஒளி நிகழ்ச்சிகள் (light show) நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, அய்ன் துபாய் பிளாசாவில் துவக்க விழா கொண்டாடப்படும் அக்டோபர் 21 மற்றும் 22 ம் தேதிகளில் நுழைவு அனைவருக்கும் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெர்ரி வீலில் 38 நிமிட சுற்றில் நீங்கள் பங்கு பெற விரும்பினால், இதற்கான டிக்கெட்டிற்கு 130 திர்ஹம் கட்டணம் என்றும் இதனை www.aindubai.com என்ற வலைதளத்திற்கு சென்று வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரீமியம் செக்-இன், வரவேற்பு பானம் மற்றும் அய்ன் துபாயின் சீவியூ லாஞ்சிற்கான (seaview lounge) அணுகல் போன்ற VIP வசதிகளும் இதில் அடங்கும்.

Seaview lounge-ஐ அணுகுவதற்கான விலைகள் ஒரு நபருக்கு 175 திர்ஹில் தொடங்கி அய்ன் துபாய் பிரீமியம் கேபின் அனுபவத்திற்காக ஒரு நபருக்கு 380 திர்ஹம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் சில தனிப்பட்ட அறைகளும் இருக்கும். ஒரு குழுவிற்கு ஒரு தனியார் கேபினை வாடகைக்கு எடுப்பதற்கான விலைகள் 1,800 திர்ஹம் முதல் ஒரு சுற்றுக்கு தொடங்குகின்றன. அய்ன் துபாய்க்கு செல்ல திட்டமிடுபவர்களுக்கு துவக்க வாரம் மிகச் சிறந்த ஒரு அனுபவத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!